உரக்க ஒலித்த வெறிப் பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 21, 2022

உரக்க ஒலித்த வெறிப் பேச்சு

(12.2.2022 நாளிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழின்  தலையங்கம்)

தனது கட்சியின் தேர்தல் வெற்றிக்காக மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி பயன்படுத்திக் கொள்ளும் பேரார்வத்தில், உத்தரப்பிரதேச முதல மைச்சர் நியாயமேயற்ற முறையில் வெறித்தனமாக பேசியுள்ளது வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்றாகும்.

உணர்வு பூர்வமாகப் பேசி வாக்காளர்களின் செல்வாக்கைத் திரட்டும் அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை, வெறித்தனமாக உரத்த குரலில் பேசுவதே அந்த நோக்கத்தை நிறைவேற்றிவிடும் என்பதால், உண்மைகளோ நியாயவாதமோ அவர் களுக்கு அதிக அளவு பயனளிப்பவை அல்ல.

தங்கள் அரசியலுக்கு மூடநம்பிக்கைகளையே சார்ந்திருக்கும் ஒரு வகையான அரசியல்வாதிகளுக்கு அவர்களது தேர்தல் போரில் இத்தகைய வெறிக் கூச்சலே, வெறி நாயை அழைக்கும் சீழ்க்கை ஒலியே, மிகமிக முக்கியமானதொரு ஆயுதமாக விளங்குவ தாகும். உத்தரப்பிரதேச வாக்காளர்கள் ஒரு தவறு செய்துவிட்டால், .பி.மாநிலமே மற்றொரு காஷ்மீ ராகவும், கேரளமாகவும், மேற்கு வங்கமாகவும் ஆகி விடும் என்று .பி.முதலமைச்சர் யோகி ஆதித்திய நாத் பேசியிருப்பதை, வேறொரு சந்தர்ப்பத்திலோ வேறு ஒரு நோக்கத்திலோ பேசி இருந்தால், இந்த அளவுக்கு நம்பிக்கையையும், கற்பனையையும் அவர் கொண்டிருப்பதை ஒரு நகைச்சுவையாகக் கருதி சிரித்துவிட்டு போய் இருக்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாநிலங் களின் வழியில் அதிக அளவு மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம் பேனால், சமூக பொருளாதார அளவில் அது மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் என்று கூறுவது அதன் நோக்கமாக இருக்க முடியாது. சமூக பொருளாதார அளவு கோலில் கேரள மாநிலம் மிகமிகச் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சராசரிக்கு மேலாகவும், மேற்கு வங்க மாநிலம் பெரும்பாலான அளவு கோல்களில் .பி.மாநிலத்தை விட மேம்பட்டதாகவும் உள்ளன. அவரின் நோக்கம் அதுவல்ல. வெறிநாயை அழைக்கும் சீழ்க்கை ஒலியாக அதனைப் பயன்படுத்துவதே அதன் நோக்கமாகும்.

மேலும் கேரளா, ஜம்மு. காஷ்மீர் (குறிப்பாக காஷ்மீர் சமவெளி) ஆகிய மாநிலங்கள் நாட்டின் மற்ற மாநிலங்களை விட அதிக அளவிலான சிறு பான்மை மக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்திலும் கூட சராசரிக்கும் அதிகமான அளவில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். சாமியார் ஆதித்தியநாத்தின் பேச்சின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த மூன்று மாநிலங்களும் குறிப்பிடத்தகுந்த அளவில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பெற்ற அரசியல் கொண்டவையாகும். உத்தரப்பிரதேச மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 20% அளவினராக இருந்தபோதும், கடந்த சட்டமன்றத்தில் அவர்களது பிரதிநிதித்துவம் 5.9% அளவில் மட்டுமே இருந்தது. 2007ஆம் ஆண்டு தேர்தலில் பா... நான்கில் மூன்று பங்குக்கும் மேலாக வெற்றி பெற்றபோதும், ஆளும் பா.. கட்சியில் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூட இருக்கவில்லை. முதலமைச்சர் தனது பேச்சில் எச்சரித்து இருந்தது போல, நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா... தோல்வியடைய நேர்ந்தால், அதிக அளவிலான முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் சட்டமன்றத்தில் ஏற்படக்கூடும்.

பல வாழ்வாதார உண்மைகள், உத்தரப்பிரதேசத் தின் சமூக பொருளாதார முன்னேற்றங்களை பற்றிய மோசமான அடையாளங்களும், ஓர் அளவுக்கு அரசாட்சியின் விளைவுகளுடன் தொடர்பு உடைய வையாகும். இந்த குறைப்பாடடினைப் போக்குவதற்கு, மக்களுக்கு நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் மானியங்களை செலுத்துவது மற்றும் ஒன்றிய அரசி னால் துவக்கப்பட்ட மக்கள் நல உதவி திட்டங்களின் மூலமாகவும், பா... அரசு முயற்சி செய்கிறது. இலக் குடன் கூடியதொரு சந்தர்ப்பத்தில், மக்கள் நலத்திட்ட உதவிகளை அளிப்பது மற்றும் குற்றச் செயல் பாடுகளை எதிர் கொள்வதற்கு கடினமான நிலைப் பாட்டினை மேற்கொள்வது ஆகிய சாதனைகளில் பா... தனித்து நின்றிருந்திருக்கக் கூடும். ஆனால் ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பின் பற்றாக்குறை காரணமாகவும், மற்ற கட்டமைப்பு அம்சங்களின் பற் றாக்குறை காரணமாகவும் கோவிட்-19 நோய்த்தொற்று காலத்தில் மாநில மக்கள் மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாயினர் என்று கூறலாம். இக்கட்டமைப்பு பற்றாக்குறைகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நீண்ட கால வறுமை, தகுந்த வேலை வாய்ப்பு களின்மை ஆகியவற்றை எதிர்கொண்டு சமாளிக் கவும் அது உதவியிருக்கக் கூடும். எரிபொருள் விலை உயர்வினால் ஏற்பட்ட பணவீக்கமும். இங்கங் கெனாதபடி எல்லா இடங்களிலும் பரவி நிற்கும் வேலையில்லாத் திண்டாட்டமும் குறைந்த அளவு மக்கள் நல உதவித்திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்லும் அரசு இயந்திரங்களின் முயற்சி களை தோற்கடித்துவிட்டன. மேற்கு உத்தரப்பிரதேசத் தில் மேற்கொள்ளப்பட்ட விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்த தேர்தல்களில் எல்லாம் பா... வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமைந்த, தோல்வியையே காணாத சமூகக் கூட்டணியை, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் அமைப்புகள் தின்று தீர்த்துவிட்டன. அதனால் பா..கட்சியும், யோகிஆதித்தியநாத்தும் மத அடிப் படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்ய வேண்டிய தங்களுடைய அரசியல் அடித்தளத்துக்கே திரும்பச் செல்ல வேண்டியதாயிற்று.

முதல் கட்ட சட்டமன்ற தேர்தல்கள் பற்றிய அடையாளங்களைக் கொண்டு காண்போமானால், மதரீதியில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்யும் சூத்திரமும் எதிர்பார்த்தது போல பயனளிப்பதாகத் தெரியவில்லை, என்றாலும் கூட தீவிரமான இந்துத் துவவாதியான சாமியார் ஆதித்தியநாத் தனது போக்கை மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானதேயாகும்

நன்றி: 'தி இந்து' 12.2.2022

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment