ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பு ரத்து! அமெரிக்கா அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 24, 2022

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பு ரத்து! அமெரிக்கா அறிவிப்பு

வாசிங்டன், பிப். 24- உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களையும், போர் தள வாடங்களையும் நிலை நிறுத்தி யுள்ளதால் கடந்த சில வாரங் களாகவே போர் பதற்றம் நீடித்து வருகிறது.

உக்ரைனின் கிழக்கு பகுதி யில் பிரிவினைவாதிகளின் கட் டுப்பாட்டில் இருக்கும் 2 பிராந் தியங்களை தனிநாடுகளாக அங் கீகரித்து ரஷ்ய அதிபர் புதின் நேற்று உத்தரவு பிறப் பித்தார்.

இதனிடையே உக்ரைன் மீது போர் தொடுக்காமல் இருந்தால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா கடந்த வாரம் தெரிவித்தது. உக்ரைன் விவ காரம் தொடர்பாக ஜெனீவா வில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத் துவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜெனீவாவில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச் சர் சர்ஜி லாவ்ரோ உடனான சந்திப்பை அமெரிக்க வெளியுற வுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். இதுதொடர் பாக மேலும் பேசிய அவர், “ரஷ்யா இப்போது படை யெடுப்பு தொடங்குவதைக் காண்கிறோம், மேலும் நம்பிக் கையை மொத்தமாக நிராகரிப் பதை ரஷ்யா தெளிவுபடுத்தி உள்ளது, இந்த நேரத்தில் அந்த சந்திப்பை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை. நான் எங்கள் கூட்டாளிகள் மற்றும் ஆட்சி யாளர்களுடன் கலந்தாலோ சித்தேன். அனைவரும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்என்று பிளிங்கன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment