நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எங்கெங்கும் திமுக கூட்டணி அமோக வெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 22, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எங்கெங்கும் திமுக கூட்டணி அமோக வெற்றி!

சென்னை,பிப்.22- தமிழ்நாட்டிலுள்ள 21 மாநக ராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி கள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12,285 வார்டுகளுக்கான உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளை தேர்ந் தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19.2.2022 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் சராசரியாக 60.70 விழுக் காட்டளவில் வாக்குகள் பதிவாயின. வாக்கு களை எண்ணுவதற்காக தமிழ்நாடு முழு வதும் 268 மய்யங்களில் வாக்குப்பதிவு எந் திரங்கள் வைக்கப்பட்டன. துப்பாக்கி ஏந்திய காவல்துறையினருடன் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டதுடன், கண்காணிப்பு கேமராக் கள் அமைக்கப்பட்டிருந்தன.  இந்நிலையில், இன்று (22.2.2022) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக் கையைத் தொடர்ந்து தேர்தல் நடவடிக் கைகள் 24.2.2022 அன்று முடிவடைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சிகள் 2.3.2022 அன்று நடைபெறும். மறைமுகத் தேர்தல் மூலம் மாநகராட்சி களுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் 4.3.2022 அன்று நடைபெறுகிறது. மறைமுகத் தேர்தலின்மூலம் மொத்தம் 1,296 பதவிகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந் தெடுக்கப்படுகின்றனர்.

காலை 11 மணி நிலவரப்படி மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் ஒட்டு மொத்த மாக 293 இடங்களில் திமுக வெற்றி பெற் றுள்ளது.  42 இடங்களில் அதிமுகவும், 30 இடங்களில் மற்றவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதில், சென்னை மாநகராட்சி தேர்தலில்  57 இடங்களில் திமுகவும், 5 இடங்களில் அதிமுகவும், பிற கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தாம்பரம் மாநகராட்சித் தேர்தலில் திமுக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  ஆவடி மாநகராட்சி தேர்தலில் திமுக 5 இடங்களிலும், அதிமுக ஓரிடத்திலும், பிற கட்சிகள் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக 17 இடங்களிலும், அதிமுக ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக 27 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும்  பிற கட்சிகள் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடலூர் மாநகராட்சி தேர்தலில் திமுக 15 இடங்களிலும், அதிமுக ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் திமுக 20 இடங்களிலும், அதிமுக 2 இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஈரோடு மாநகராட்சி தேர்தலில் திமுக 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திருச்சி மாநகராட்சி தேர்தலில் திமுக 22 இடங்களிலும் அதிமுக 1 இடத்திலும் பிற கட்சிகள் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

வேலூரில் திமுக வேட்பாளர்

மூன்றாம் பாலினத்தவர் வெற்றி

வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் இதுவரை 11 வார்டுகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் 37 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அவரை சக திருநங்கைகள் ஆரத் தழுவி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்தனர்.

வாக்கு எண்ணிக்கை 12 மணி நிலவரப்படி

138 நகராட்சிகளில் திமுக கூட்டணி: 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 6 இடங்களும், பிற கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைத்துள்ளன.

ராசிபுரம் நகராட்சியில் திமுக கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 மற்றும் சுயேச்சைகள் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

மன்னர்குடி நகராட்சியில் 14வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, சுயேச்சைகள் தலா ஓரிடம் பெற்றுள்ளனர்.

மேட்டுப்பாளையம்  நகராட்சியில் 12 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 2 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சியில் 14 வார்டுகளில் 11 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.அதிமுக 2, சுயேட்சை 1 இல் வெற்றி.

பட்டுக்கோட்டை நகராட்சியில் 12 வார்டுகளில் 6-இல் திமுக வெற்றி; அதிமுக 4, சுயேட்சை 2 வார்டில் வெற்றி.

மானாமதுரை நகராட்சியில் 15 வார்டுகளில் திமுக, அதிமுக 5 வார்டுகளில் வெற்றி.

பொள்ளாச்சி நகராட்சியில் 36-இல் 14 வார்டில் திமுக வெற்றி; அதிமுக 2, சுயேட்சை 1 வார்டில் வெற்றி.

கோவில்பட்டி நகராட்சியில் 24-இல் 17 வார்டுகளில் திமுக வெற்றி; சுயேட்சை 3, அதிமுக 2, அமமுக, பா... தலா 1 வார்டுகளில் வெற்றி.

விருதுநகர் நகராட்சியில் 30-இல் 26 வார்டுகளில் திமுக வெற்றி; சுயேட்சை 2, அதிமுக, அமமுக தலா 1 வார்டில் வெற்றி.

குளித்தலை நகராட்சியில் 24-இல் 21 வார்டுகளில் திமுக வெற்றி; அதிமுக1-இல் வெற்றி.

லால்குடி நகராட்சியில் 10 வார்டில் 8-இல் திமுக கூட்டணி, அதிமுக, சுயேச்சை தலா 1-இல் வெற்றி.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 9 வார்டுகளில் திமுக வெற்றி.

வேதாரண்யம் நகராட்சியில் 9- ஆவது வார்டில் திமுக வெற்றி.

திருத்துறைப்பூண்டி, அம்பாசமுத்திரம், சத்தியமங்கலம், துவாக்குடி நகராட்சிகளை திமுக கைப்பற்றியது.

வால்பாறையில்’ 21 வார்டுகளில் 19 இடங்களில் வென்று, நகராட்சியை திமுக கைப்பற்றியது. அதிமுக, சுயேச்சை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளையும் திமுக கைப்பற்றுகிறது.

விருதுநகர், காங்கேயம், பொள்ளாச்சி, மேலூர், ராமநாத புரம் நகராட்சிகளை திமுக கைப்பற்றியது.

No comments:

Post a Comment