குறட்டையிலிருந்து விடுபட... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 21, 2022

குறட்டையிலிருந்து விடுபட...

எல்லாருக்கும் அமைதியான தூக்கம் வாய்ப்பது எளிதல்ல. வேலைப்பளு, மன அழுத்தம், குடும்பச் சிக்கல்கள் எனப் பல்வேறு பிரச்சினைகளால் பலருக்கும் தூக்கம் சவாலானதாக இருக்கிறது. இதில் குறட்டையும் சேர்ந்துகொண்டால், அவ்வளவுதான்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குறட்டை பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். அருகில் இருப்பவர்களுக்கும் அது பெரும் தொந்தரவளிப்பதாக இருக்கிறது. குறட்டை விடுபவர்கள் எழுந்தவுடன், “நீங்க ரொம்ப குறட்டைவிட்டீங்கஎன்று சொன்னால்கூட, அவர்கள் நம்ப மாட்டார்கள்.

குறட்டை எப்படி உருவாகிறது?

துணி காயப்போடும் கொடி மீது காற்று வேகமாக மோதும்போது அசைந்து ஒரு சத்தத்தை உருவாக்கும் அல்லவா, அதுபோலத்தான் குறட்டை யும். நாம் தூங்கும்போது நாக்கின் பின் உள்ள பகுதியின் அளவு குறுகலாகும். அப்பகுதியைச் சுற்றியுள்ள திசுக்களும் தளர்ந்து, நெகிழ்ந்து போகும். நாம் தூங்கும்போது விடும் மூச்சினால் வேகமாக வெளிவரும் காற்று தளர்வாக உள்ள திசுக்களின் மீது அதிர்வை உருவாக்கும். அந்த அதிர்வின் ஒலியே குறட்டை.

மூச்சுத்திணறல்

தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்கிற பிரச்சினை இந்த இடத்தில்தான் தொடங்கு கிறது. தொண்டையின் பின்பகுதியில் உள்ள சுவாசக்குழாய் தசைகள் தளர்ந்து, ஓய்வுக்கு உள்ளாகி சுவாசப்பாதையைக் குறுக்கி அடைப்பை ஏற்படுத்திவிடுகிறது. தொந்தரவு நிறைந்த இந்தத் தூக்கம் ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவைக் குறைக்கிறது. சுவாசக்குழாய் தசைகளின் தளர்வினாலும், மோசமான நாக்கின் நிலை, வாய் வழியாக மூச்சுவிடுவது ஆகிய காரணிகளால் தூக்கத்தில் மூச்சுத்திணறலும் குறட்டையும் உருவாகின்றன.

 பகல் நேரத்தில் அதீத சோர்வு

குறட்டைச் சத்தம் அதிகரித்தல்

தூக்கத்தின்போது அடிக்கடி மூச்சுவிடுவது தடைபடுவது.

மூச்சுத்திணறலால் திடீரென விழித்துக் கொள்வது.

காலை நேரத் தலைவலி

பகல் நேரத்தில் கவனச்சிதறல்

மனநிலை மாற்றம் - சிலருக்கு மனச்சோர்வு, எரிச்சல் உணர்வு.

உயர் ரத்த அழுத்தம்

உணர்ச்சிக் குறைபாடு

இதயக் குறைபாடுகள்.

குறட்டையிலிருந்து மீள்வோம்

மேற்சொன்ன பயிற்சிகள் குறட் டையைப் பெருமளவு குறைக்க உதவுகின்றன. தூக்கத் தில் மூச்சுத்திணறல் கொண்டவர்களில் மிதமான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மேற்சொன்ன பயிற்சிகள் உதவியாக இருக்கும். மற்ற சிகிச்சை முறைகளோடு இந்த உடற் பயிற்சிகளை இணைத்து மேற்கொள்ளலாம். தனிப்பட்ட நபர்களுடைய தொண்டை, நாக்கு ஆகியவற்றின் அளவு, வாயின் வடிவங் களைப் பொறுத்து பயிற்சிகளின் பயன்கள் வேறுபடலாம். மது அருந்துபவர்கள், தூக்க மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு இந்தப் பயிற்சிகளின் நன்மைகள் குறைவாகக் கிடைக்கலாம். சிலருக்குப் பயிற்சிகளோடு மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை முறைகளும் தேவைப்படலாம்.

குழந்தைகள், மத்திய தர வயதினர் பிசியோ தெரபி மருத்துவரது ஆலோசனைப்படி இந்தப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் குறட்டைப் பிரச்சினையிலிருந்து மீள்வதோடு நாள்பட்ட இதயப் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் நல்வாழ்வு வாழலாம். அப்போது, நன்கு ஆழ்ந்து உறங்கி, உற்சாகமாகச் செயல்பட முடியும்.

No comments:

Post a Comment