ரூ.15,000-க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்: பி.எப். அலுவலகம் பரிசீலனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 22, 2022

ரூ.15,000-க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்: பி.எப். அலுவலகம் பரிசீலனை

புதுடில்லி, பிப்.22  அமைப்புசார் துறைகளில் ஒருவர் பணிக்குச் சேரும்போது அவரது அடிப்படை ஊதியம்ரூ.15000-க்கு கீழ் இருந்தால், அவர் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ் 95) கீழ் வருவார்.

அதன்படி அவரது ஊதியத்தில் இருந்து 8.33 சதவீதத்தை ஓய்வூ தியத்துக் கென்று அவரது நிறு வனம் செலுத்தும். ரூ.15,000-க்குமேல் அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களில் சிலரும் வருங்கால வைப்பு நிதி அலுவலக (இபிஎப்ஓ) உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கும் 8.33சதவீதம் ஓய்வூதியத்துக்கு ஓதுக்கப்படுகிறது.

இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

இந்நிலையில், தற்போது

ரூ. 15000-க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறுவோருக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர பிஎப் அலுவலகம் பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து வரும் மார்ச்மாதம் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் குவாஹாட்டி நகரில் நடக்கவிருக்கும் ஒன்றிய அறங்காவலர்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment