நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை காட்சிப் பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை காட்சிப் பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.5  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை என தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக காட்சிப் பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 15 மாநக ராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 121 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 528 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை நியாயமாகவும், ஜனநாயக ரீதியாக நேர்மையாக வும் நடத்தக்கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன் னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற் றும்  நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் 3.1.2022 அன்று விசாரணைக்கு வந்தது.

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வேட்புமனு தாக்கல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை என அனைத்தையும் முழுமையாக 100 சதவீதம் வீடியோ பதிவு செய்யவும், கண்காணிப்பு கேம ராக்கள் மூலமாக கண்காணிக்க வும் உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார்.

மாநில தேர்தல் ஆணையம் உறுதி

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்குரைஞர் சிவசண் முகம் ஆஜராகி, ‘‘வேட்புமனுத் தாக்கல் முதல் வாக்கு எண் ணிக்கை வரை ஒவ்வொரு நடவடிக்கையும் காட்சிப் பதிவு செய்யப்படும். வேட்புமனுக் களின் பக்கங்களை குறிப்பிட்டு ஒப்புகைச் சீட்டு வழங்க விதிகள் இல்லை’’ என்றார்.

பின்னர் தலைமை நீதிபதி, ‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லுக்கான அனைத்து நடவடிக் கைகளையும் எடுத்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ளது.

எனவே, நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலின்போது வேட்புமனுத்தாக்கல், வாக்குப் பதிவு மற்றும்வாக்கு எண் ணிக்கை என தேர்தல் நடவடிக் கைகள் அனைத்தையும் முழு மையாக காட்சிப் பதிவு செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள் ளனர்.

No comments:

Post a Comment