ஈரோட்டில் சிறைக்கைதிகள், காவல்துறையினருக்கு கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 21, 2022

ஈரோட்டில் சிறைக்கைதிகள், காவல்துறையினருக்கு கரோனா தொற்று

ஈரோடு, ஜன.21 ஈரோடு மாவட் டத்தில் கரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. மூன்று சிறைக் கைதிகள், 30 காவல்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கரோனா மூன்றாவது அலை தொடங்கிய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற் றால் பாதிக்கப்படுவோரின் எண் ணிக்கை நாள்தோறும் அதி கரித்து வருகிறது. 

முதல் அலை, இரண்டாவது அலையைக் காட்டிலும் தற்போது நாள் தோறும் தொற்று பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த 7ஆம் தேதி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 100-அய் கடந்தது. அடுத்தடுத்த நாட்களில் எண்ணிக்கை அதி கரித்து தற்போது நாள் ஒன்றுக்கு 906 பேர் பாதிக்கப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கரோனா தொற் றால் சிகிச்சை பெறுவோர் எண் ணிக்கையும் 4 ஆயிரத்தைக் கடந் துள்ளது.

கரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள 20 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதி யாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. 

தொற்று காரணமாக வீடு களில் தனிமைப் படுத்தி சிகிச்சை பெறு வோரை, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின் றனர்.

முன்களப்பணியாளர்களாக பணிபுரியும் காவல்துறையைச் சேர்ந்த 30 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பாதிப்பு அதிக மில்லை எனத் தெரிவித்த சுகா தாரத்துறையினர், பெரும்பா லான வர்கள் வீடுகளில் தனி மைப்படுத்திக் கொண்டுள்ள தாகத் தெரிவித் தனர்.

இதேபோல், ஈரோடு கிளைச் சிறையில் 50-க்கும் மேற்பட்ட கைதி கள் அடைக்கப்பட் டுள்ள நிலையில், அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர்கள் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நேற்று 919 பேர்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (20.1.2022) 919 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 406 பேர் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண் ணிக்கை 4465 ஆக உயர்ந்துள்ளது.


No comments:

Post a Comment