அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 21, 2022

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை, ஜன.21 ஒன்றிய-மாநில அரசு சின்னங்களை தவறாக பயன் படுத்துபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், என்று காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேனாள் நாடாளுமன்ற உறுப் பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் கள், பொதுத்துறை நிறுவன அதி காரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு ஆணையகங் களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பலர் ஒன்றிய-மாநில அரசு சின்னங் களை தவறாக தங்களது வாகனங் களில் ஸ்டிக்கர்கள், கடிதங்கள், கொடிகள் மற்றும் பெயர் பலகைகளில் பயன்படுத்துவதாக தெரிய வந்ததால், உரிய நடவடிக்கை எடுக்க, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு சின்னங்களை அனுமதி இன்றி தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வழிவகைகள் உள்ளது. அரசு விதிகளின்படி அனு மதிக்கப்பட்ட நபர்கள், அதிகாரிகள் தவிர மற்றவர்கள் அரசு சின்னங் களை பயன்படுத்தக்கூடாது. மேலும் மேனாள் அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகளும் தங்களது வாகனங்களில் முத்திரை மற்றும் லெட்டர்பேடு, விசிட்டிங் கார்டு களில் அரசு சின்னங்களை பயன் படுத்தக்கூடாது.

இதுபற்றி பொதுமக்கள் சம்பந் தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். 

தவறாக பயன் படுத்தப்படும் அரசு சின்னங்களை சாட்சிகள் முன்னிலையில் பறிமுதல் செய்யவும், அந்த நிகழ்வை காணொலி காட்சி யாக பதிவு செய்யவும், காவல்துறைக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்

ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment