பீரங்கி மய்யத்தில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

பீரங்கி மய்யத்தில் பணியிடங்கள்

 நாசிக்கில் உள்ள பீரங்கி மய்யத்தில் (ஆர்டில்லரி சென்டர்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: குரூப் 'சி' பிரிவில் கிளார்க் 27, எம்.டி.எஸ்., 50, ரேஞ்ச் லாஸ்கர் 8, ஆர்டி லாஸ்கர் 7, வாஷர்மேன் 2, குக் 2, கார்பென்டர் 2, பார்பர் 2, பயர்மேன் 1 உட்பட மொத்தம் 107 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பெரும்பாலான பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு, சில பதவிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 21.1.2022 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, டிரேடு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப விவரத்துடன் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Commandant, Headquarters, Artillery Centre, Nasik Road Camp PIN — 422102 கடைசிநாள்: 21.1.2022

விவரங்களுக்கு: https://indianarmy.nic.in/

No comments:

Post a Comment