உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 13, 2022

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, ஜன.13 சட்டப்பூர்வ தடையில்லாத பட்சத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது

அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது

உச்ச நீதிமன்ற உத்தரவு கடந்த ஆண்டு மட்டுமே பொருந்தும் என்பதால் இந்த கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்பு களில் அரசு மருத்துவர் களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடுக்கு சட்டப் பூர்வ தடையில்லாத பட்சத்தில் இந்த கல்வி ஆண்டு அமல்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. சிறப்பு நிபுணத்துவ மருத்துவப் மேற் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங் கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நிறுத்தப் பட்டது. 2021-- 2022ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவரான டாக்டர் டி.சுரேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், 2020 --2021ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு வழங்காததை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில், 2020--2021 ஆம் கல்வி யாண்டு செயல்படுத்த முடியாது என்று தெரிவிக்கப் பட்டதாகவும், அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற உத்தரவு கடந்த ஆண்டு மட்டுமே பொருந்தும் என்பதால் இந்த கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, இந்த கல்வி ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை, எந்த ஒரு சட்ட தடையும் இல்லாத பட்சத்தில் செயல்படுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment