தன்மானம், தமிழ் மானம் காக்கப்படவே ஜனவரி - 26 - கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

தன்மானம், தமிழ் மானம் காக்கப்படவே ஜனவரி - 26 - கண்டன ஆர்ப்பாட்டம்


— டில்லித் தலைநகரில் ஜனவரி (2022) 26ஆம் தேதி நடை பெறவிருக்கும் அலங்கார ஊர்தி அணி வகுப்பில் மாநிலங்கள் அத்தனைக்கும் பங்கு பெற உரிமை இல்லையா?

— இந்தியா என்பது மாநிலங்கள் இணைந்த கூட்டரசு அல்லவா?

— மூன்று முறை தமிழ்நாடு அரசின் சார்பில் அக்குழு (அலங் கார ஊர்தி அணி வகுப்புத் தேர்வுக்குழுவுக்கு) விளக்கம் அளித்தும், மும்முறையும் - இரண்டு முறை ஆயுள் தண்டனை பெற்று,சிறையில் செக்கிழுத்த ஒப்பற்ற தியாகச் சீலர் வ.உ. சிதம்பரனாருக்கும், தனியே வெள்ளையர்களை எதிர்த்து தனது அரசை இழந்தாலும் பரவாயில்லை என்ற வீரமங்கை வேலு நாச்சியார், தேசியக் கவி பாரதியார், வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மருது பாண்டியர்கள் சின்னமருது, பெரிய மருது ஆகியோரின் தியாகத்தை அதில் காட்டுவது 75ஆம் ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் பெருமையா, அல்லவா?

வ.உ.சி. வெறும் வியாபாரிதானே என்று நிபுணர் குழுவில் கேட்டதாகத் தகவல்.

இது வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது போன்ற வேதனை அல்லவா?

தமிழ்நாடு முதலமைச்சர் - பிரதமருக்குக் கடிதம் எழுதியும் பிரதமர் தலையிட மறுப்பது அதைவிடக் கொடுமை அல்லவா?

தமிழ்நாடும், தமிழ் மண்ணின் தியாகமும் கேவலமாக மதிக்கப்படுவதை எதிர்த்து குமுறும் நம் நெஞ்சங்களின் உணர்வுகளை அற வழியில், ஜனநாயக முறையில் காட்டவே 26.1.2022   அன்று காலை வீடுகளிலும், கட்சி அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம்.

மாநில உரிமை மதிக்கப்பட வேண்டாமா?

அனைவரும் கரோனா விதிமுறைப்படி கட்டுப்பாட்டுடன் கலந்துகொள்வீர்!

 

No comments:

Post a Comment