அடையாள அட்டையில் ‘காவிமயம்’ இந்திய மாணவர் சங்கம் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

அடையாள அட்டையில் ‘காவிமயம்’ இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

புதுச்சேரி, அக்.25  மாணவர் அடையாள அட்டையில்  உள்ள திருவள்ளுவர் படத்துக்கு காவி வண்ணத்தில் உடை அணி வித்திருக்கும் புதுச்சேரி கல்வித்  துறைக்கு இந்திய மாணவர் சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது

 இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் ஜெயபிரகாஷ், செய லாளர் பிரவீன்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி அரசு திருவள்ளுவர்  பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில், திருவள் ளுவர் காவி வண்ண நிறத்தில் இருக்கும் படத்தை அச்சிட்டு  மாணவர்களுக்கு வழங்கி உள்ளனர். ஜாதி, மத பாகுபாடின்றி ஒற்று மையை மாணவர்களுக்கு போதிக்க  வேண்டிய பள்ளிக் கூடத்தில் காவி மயத்தை புகுத் துவது என்பது,  பாசிச  பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு களின் மதவெறிக் கொள்கைகளை இளம் மாணவர்களின் நெஞ்சில்  விதைக்கும் முயற்சியே. இது முதல்  முறை அல்ல ஒன்றிய பாஜக அரசு  இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு  சான்றாக இருக்கும் வரலாற்றை  தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகிறது. புதுச்சேரியிலும் அரங் கேற்ற  துடித்து வருகிறது.  தமிழ் நாடு, புதுச்  சேரியின் முற்போக்கான அறிவு மரபுக்கு காவி சாயத்தை பூசும் இந்த  இழி செயலை  வன் மையாக கண்டிப்பதுடன், இத் தகைய செயல்கள் தொடருமா னால் இந்திய மாணவர் சங்கம் தீவிர போராட்டத்தை முன்னெ டுக்கும் என்று புதுச்சேரி  அரசுக் கும், கல்வித் துறைக் கும் கண்ட னம் தெரிவிப்பதோடு மாணவர் களைத் திரட்டி இத்தகைய நடவ டிக்கைக்கு எதிராக இந்திய மாண வர் சங்கம் போராடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment