கவுரி லங்கேஷ் கொலை வழக்கை ரத்து செய்த கருநாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 24, 2021

கவுரி லங்கேஷ் கொலை வழக்கை ரத்து செய்த கருநாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம்

புதுடில்லி,அக்.24- கவுரி லங்கேஷ் கொலையில் கைதானவர் மீது பதிவான வழக்கை ரத்து செய்த கரு நாடக உயர்நீதிமன்றத்தின் உத்த ரவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது வீட்டின் முன் வைத்து  அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ராஜராஜேஸ்வரிநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றப்பட்டு இருந்தது.

இந்த கொலை வழக்கு தொடர் பாக மோகன் நாயக், அமோல் காலே, ராஜேஸ் பங்காரா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு இருந் தனர். இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை செய்ய திட்டம் தீட்டிய தாகவும், கொலையாளிகளை ஒருங் கிணைத்து கொலை செய்ததாகவும் மோகன் நாயக் மீது கருநாடக திட்டமிட்ட குற்றம் புரிதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் தன் மீது பதிவு செய்யப் பட்ட இந்த வழக்கை எதிர்த்து கருநாடக உயர்நீதிமன்றத்தில் மோகன் நாயக் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த கருநாடக உயர்நீதிமன்றம்மோகன் நாயக் மீது பதிவு செய்யப்பட்ட கருநாடக திட்டமிட்ட குற்றம் புரிதல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து கவுரி லங்கேசின் சகோதரி கவிதா லங்கேஷ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி .எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு  முன்பு நடந்து வந்தது. இந்த நிலையில் அந்த மனுவின் மீதான விசாரணை முடிந்த நிலையில்  21.10.2021 அன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு கூறியது.

 அதில் மோகன் நாயக் மீது பதிவான திட்டமிட்ட குற்றம் புரிதல் வழக்கை கருநாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தவறு என்றும், அவர் மீது அந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாகவும், மோகன் நாயக்கின் மனுவை சரியாக பரிசீலனை செய்யாமல் கருநாடக உயர்நீதிமன்றம்தீர்ப்பு கூறியதாகவும் நீதிபதிகள் கூறினர்.

மேலும் கரு நாடக உயர்நீதி மன்றத்தின் உத்த ரவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தர விட்டனர்.

No comments:

Post a Comment