புதிய நிறத்தில் அறிமுகமான ஹீரோ இருசக்கர வாகனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 24, 2021

புதிய நிறத்தில் அறிமுகமான ஹீரோ இருசக்கர வாகனம்

மும்பை, அக். 24- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நிறம் ஸ்கார்லெட் ரெட் என அழைக்கப்படுகிறது. முன்புறபேனல், புளோர் போர்டு பேனல் மற்றும் முன்புற பென்டர் முழுக்க சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது.

இருசக்கர வாகனத்தின் பின்புறம் மேட் பிளாக் நிறம் பூசப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரெட், புளூ மற்றும் கிரே ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய நிறம் சேர்த்து மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஏழு நிறங்களில் கிடைக்கிறது. இந்த இருசக்கர வாகனத்தில் 110சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 8.15 பி.எச்.பி. திறன், 8.75 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மாடல் விலை ரூ. 65,900 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 66,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment