உள்ளாட்சித் தேர்தல் - தி.மு.க. கூட்டணியின்- மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

உள்ளாட்சித் தேர்தல் - தி.மு.க. கூட்டணியின்- மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்!

ஆட்சிக்கு நற்பெயரையும் - அவப்பெயரையும் அளிப்பது உள்ளாட்சி நிர்வாகமே!

அதை மறந்துவிடாதீர்கள் - புதிய பொறுப்பாளர்களே!

முதலமைச்சர் கூறியதை மனதிற்கொண்டு சிறப்பாக பணிகள் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி! நன்றி!!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து களையும், பாராட்டுகளையும் தெரி வித்து, உள்ளாட்சியின் பொறுப்புக்கு வரக் கூடியவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் பணிகள் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி மாலையைப் பொதுமக்கள் தி.மு..வுக்கு - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத லமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குச் சூட்டி மகிழ்ந்துள்ளனர். தி.மு.. கூட்டணி யில் உள்ள கட்சியினருக்கும் சிறப்பான வெற்றியை வழங்கி மகிழ்ந்துள்ளனர் வாக்காளர்ப் பெருமக்கள்.

(வெற்றி விவரப் பட்டியல் காண்க).

இந்த வெற்றியைக் குறித்து நமது முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடத்தக்கதாகும்.

5 மாத ஆட்சிக்கு நற்சான்று!

இந்த வெற்றி கடந்த அய்ந்து மாத தி.மு.. ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்றாகும். சாதனைச் சரித்திரம் தொடர்வதற்கு மட்டு மல்ல - செய்த சாதனைகளுக்கும் மக்கள் அளித்த அங்கீகாரம் என்றும் மிகச் சரியா கவே குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர்.

தேர்தல் அறிக்கைக்குக் கிடைத்த மரியாதை!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்த லின்போது தி.மு.. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மளமளவென்று நிறை வேற்றப்பட்டு வந்துள்ளன.

தேர்தல் அறிக்கை என்றால், அது வெறும் சம்பிரதாயம் என்றிருந்த மனப்பான் மையை மாற்றி - மக்களை மதித்து அறி விக்கப்பட்ட  அறிவு நாணயமான செயல் என்ற புதிய பரிமாணத்தை தேர்தல் அறிக்கைக்குக் கொடுத்த தி.மு..வின் இந்த செயல்பாடு - ஜனநாயகத்தின் திசையில் திருப்பம் தரும் புதிய பொன்னேடும் - கல்வெட்டுமாகும்.

பண்புக் குறைவான எதிர்க்கட்சிகளின் போக்கு!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு வெளிவந்த நிலையில், முன்னாள் ஆளும் கட்சியும், இந்நாள் எதிர்க்கட்சியு மான ...தி.மு..வின் இரட்டைத் தலைமையினர் - மக்களாட்சியின் மாண் புக்கு உகந்த வகையில், வெற்றி பெற்ற வர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் மன நிலையில் இல்லாது, மனநிலை பாதிக்கப் பட்டவர்கள்போல வார்த்தைகளைக் கொட் டியிருப்பது - ‘இன்னும் கெட்டுப் போகி றோம் - என்ன பந்தயம் கட்டுகிறாய்?' என்ற நிலைக்குச் சென்றிருப்பது ஆரோக்கிய மானதல்ல. மக்கள் தீர்ப்பை மனமுவந்து ஏற்க பக்குவமாகவேண்டும்.

தி.மு.. தன் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வெற்றியை ஈட்டியி ருக்கிறது என்று சொல்லுவது வாக்காளர் களையே கொச்சைப்படுத்துவதாகும்.

...தி.மு.. ஆட்சியின்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு..தானே 52% வெற்றி பெற்றது!

அப்படிப் பார்க்கப் போனால், சட்டப் பேரவைத் தேர்தலுக்குமுன் ...தி.மு.. ஆட்சியின்போது நடத்தப்பட்ட உள் ளாட்சித் தேர்தலின்போதுகூட தி.மு.. 52 விழுக்காடு வெற்றி பெற்றதே - அது எதைக் காட்டுகிறது? அதை ஏன்வசதியாக' மறந்தீர்கள்?

படிப்பினைப் பெறவேண்டியவர்கள் பழிபோட்டுத் தப்பிப்பது பரிதாபத்துக் குரியதே!

இந்திய ஒன்றியத்தை ஆளும் கட்சி - அதன் கிளையான தமிழ்நாட்டுப் பா... வின் தலைவர் தெரிவித்திருக்கும் அதே கருத்தும் - நல்ல நகைச்சுவையே!

தி.மு..வுக்குக் கிடைத்திருப்பது தற் காலிக வெற்றியாம் - பா...வுக்குக் கிடைத் திருப்பது தற்காலிக தோல்வியாம்! ஏதோ இவர்கள் தமிழ்நாட்டில் நிரந்தர வெற்றியை முன்பு பெற்றதுபோலவும், இப்பொழுது கிடைத்திருப்பது தற்காலிக தோல்வி என் பது போலவும் கூறியிருப்பது தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்ளும் அனுதாபத் தீர்மான சொல்லாடல் ஆகும்.

ஆர்ப்பரித்த கட்சிகள் எங்கே?

நடந்து முடிந்த தேர்தலில் - மேடைகளில் தோள்தட்டி, தொடை தட்டி ஆர்ப்பரித்த சில கட்சிகள் எந்தக் கரையில் ஒதுங்கிக் கிடக்கின்றன என்பதை இனிமேல்தான் தேடவேண்டும். இனிமேலாவது அடக் கத்தைக் கற்றுக் கொண்டால் சரி... இல்லை என்றால், மீதி மிச்சத்தையும் தமிழ்நாட்டு மக்கள் அடக்கம் செய்துவிடுவார்கள்.

இந்தத் தேர்தல் முடிவு குறித்து தி.மு.. தலைவரும், முதலமைச்சருமான மாண்பு மிகு  மு..ஸ்டாலின் அவர்கள் வெற்றியை அடக்கமாகக் கொண்டாடவேண்டும் என்று கூறியதோடு, மிக முக்கியமான ஒன்றையும் அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சரின் முத்தாய்ப்பான அறிக்கை!

‘‘எத்தகைய நல்ல திட்டங்களைக் கோட்டையிலிருந்து உத்தரவிட்டாலும், அதனைக் குக்கிராமத்தில் வாழும் மக்களின் வாசலில் நிறுத்தவேண்டியது உள்ளாட்சி அமைப்புகளே! அதன் பிரதிநிதிகளாகிய நீங்கள்தான் அதனை நெஞ்சில் வைத்து, மக்களுக்காக உழைக்கவேண்டும்'' என்ற முதலமைச்சரின் கூற்று அறிவுரைக்கும் மேலான பொறுப்பான இரத்தினச் சுருக்க மான கருத்துரையாகும்.

நற்பெயரும்அவப்பெயரும்!

ஆட்சிக்கு நல்ல பெயரை ஏற்படுத்து வதும், அவப்பெயரை அவசர கதியில் தீப்பொறிபோல பற்ற வைத்துப் பரப்புவதும் உள்ளாட்சி நிர்வாகமேயாகும்!

மக்கள் வைத்த நம்பிக்கைக்கு மேலாக உள்ளாட்சிகளில் பொறுப்பேற்பவர்கள் நடந்துகாட்டவேண்டும் - நன்னடத்தை சான்றிதழை வழங்குபவர்கள் வாக்களித்த வர்கள் மட்டுமல்ல - வாக்களிக்காத வர்களும்கூட!

இதனை ஒரு சுவர் எழுத்தாகக் கொண்டு செயல்படுவார்களாக!

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்  (வெற்றி பெற்ற மற்ற கட்சியினர் உள்பட) - வெற்றிக்கு உழைத்தத் தோழர்களுக்கும் பாராட்டுகள் - தி.மு..வின் கூட்டணி கட்சி களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்!

  

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

14.10.2021

No comments:

Post a Comment