நெதர்லாந்தில் வாழைப்பழம் போல மஞ்சள் நிறத்தில் மீன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

நெதர்லாந்தில் வாழைப்பழம் போல மஞ்சள் நிறத்தில் மீன்

ஆம்ஸ்டர்டாம், அக். 25- நெதர்லாந்து ஏரி ஒன்றில் வாழைப்பழம் போன்று மஞ்சள் நிறத்தில்  அரிய நிற மீன் ஒன்று சிக்கியது. அரிய நிற மீனை மீண்டும் ஏரியிலேயே விட்டனர். நெதர்லாந்தில் உள்ள ஏரியில் கிளாட்ஸ் என்பவர் தனது சகோதரருடன் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கேட்ஃபிஷ் வகையை சேர்ந்தமுழு மஞ்சள் நிறத்தில் மீன் ஒன்று அவர்களின் கையில் சிக்கி யது. அரிய வகை நிறத்தில் இருந்த தால் ஆச்சரியமடைந்த கிளாஸ் சில ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் தண்ணீரில் விட்டு விட்டார். இப்பகுதியில் வேல்ஸ் கேட்பிஷ் எனப்படும் மீன் வகைகள் அதிகளவில் பிடிபடும்.

கேட்ஃபிஷ்(சிலுருஸ் கிளானிஸ்) இவை அய்ரோப்பாவில் உள்ள ஏரி மற்றும் ஆறுகளில் மிகுதியாக இருக்கும் 50 ஆண்டு வரை வாழும் இவ்வகை மீன்கள் 9 அடி (2.7 மீட்டர்) வரை வளரும் 130 கிலோ எடை இருக்கும் பெரும் பாலும் அடர் பச்சை-கருப்பு நிறத் தில் காணப்படும் . ஆனால் பிடி பட்ட மீன் முழுவதும்  மஞ்சளாக இருந்தது ஆச்சரியமளித்தது.

அரிய நிறத்தில் இருந்ததாலும் மேலும் வளர கூடிய வாய்ப்பும்  இருந்ததால் மீனை மீண்டும் நீரில் விட்டு விட்டதாக கிளாட்ஸ் கூறினார்.மீனின் நிறம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment