தங்க பத்திர விற்பனை நாளை துவங்குகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 24, 2021

தங்க பத்திர விற்பனை நாளை துவங்குகிறது

புதுடில்லி, அக். 24- நடப்பு நிதியாண்டுக்கான அடுத்த கட்ட தங்க பத்திர வெளியீடு, 25ஆம் தேதி துவங்க இருப்பதாக, ஒன்றிய நிதி யமைச்சகம் தெரிவித்து உள்ளது.

நடப்பு நிதியாண்டுக் கான அடுத்த வரிசை தங்க பத்திர வெளியீடு, நான்கு கட்டங்களாக, அக்டோபர் முதல், அடுத்த ஆண்டு மார்ச் வரை நடைபெற உள்ள தாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னதாக, கடந்த மே முதல், செப்டம்பர் வரையிலான காலத்தில், நடப்பு நிதியாண்டுக்கான தங்க பத்திர வெளியீடு, 6 கட் டங்களாக நடைபெற்றது. இதையும் சேர்த்தால், நடப்பு நிதியாண்டில் மொத்தம் 10 கட்டங் களாக பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன.

இதுவரை 6 கட்டங் களாக வெளியிடப்பட்டி ருக்கும் நிலையில், 7ஆவது கட்ட வெளியீடு இம்மாதம் 25ஆம் தேதி துவங்கி, 29ஆம் தேதி வரை, மொத்தம் 5 நாட் கள் நடைபெற உள்ளது. பத்திரங்கள் நவம்பர் 2ஆம் தேதி வழங்கப் படும். ஒன்றிய நிதியமைச் சகத்தின் சார்பில், ரிசர்வ் வங்கி இந்த தங்க பத்திர வெளியீட்டைமேற் கொள்கிறது.

பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு, வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படுகி றது. வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற் கொள்ளும் முதலீடுக ளுக்கு, 1 கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங் கப்படும் என, ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால், ‘கிரெடிட், டெபிட்கார்டு உள் ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிரா முக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற் றில், தங்க சேமிப்பு பத்தி ரங்கள் விற்பனை செய்யப் படும்.

No comments:

Post a Comment