தமிழர்களின் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு பூமி பூஜை எதற்கு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

தமிழர்களின் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு பூமி பூஜை எதற்கு?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர் சங்கம் கண்டனம்

சென்னை,அக்.15- தொல்லியல்துறை அதிகாரியின்  அத்துமீறிய செயலைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத் தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

ஆதிச்சநல்லூர்  புளியங்குளம் பகுதியில்  ஒன்றிய அரசின் தொல்லியல்துறை கையகப்படுத்தியுள்ள தொல்லியல் அகழ் வாய்வுக் களத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்ப தற்கான தொடக்க நிகழ்வு 11.10.2021 அன்று நடத்தப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளரும் திருச்சி மண்டல தொல்லியல் இயக்குநருமான அருண்ராஜ் என்பவரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு புரோகிதர்களை வைத்து குறிப்பிட்ட தொரு மதச்சார்பான சடங்குகளுடன் கூடிய பூஜையாக  நடத்தப்பட்டுள்ளதாக ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. மதச்சார்பற்ற அர சமைப்புச் சட்டத்தின் கீழ் பணியாற்றும் ஓர்  ஊழியராகிய அவர். அரசு நிகழ்வை இவ்வாறு மதச்சார்பான பூஜையாக நடத்தியுள்ளது அர சமைப்புச் சட்டத்திற்கும், நடத்தை விதிகளுக்கும் புறம்பானது என தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது.  

ஆரியக் கடவுள்களும் வேதமயப்பட்ட சடங்குகளும் சமஸ்கிருத மந்திரங்களும் தோன்றுவதற்கு நெடுங் காலத்திற்கு முன்பே நிலை பெற்று உச்சத்தில் இருந்த தமிழர்களின் பண்பாட்டுத் தொன்மையை அவமதிக்கும் வகையில் இந்தப் பூஜை நடத்தப்பட்டுள்ளமைக்கு தமிழ்நாடு அரசும் தனது கண்டனத்தை தெரிவிக்குமாறு தமுஎகச கேட்டுக் கொள்கிறது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment