நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்வதால் ஏற்படும் பாதிப்பை எப்படி எதிர்கொள்வது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 23, 2021

நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்வதால் ஏற்படும் பாதிப்பை எப்படி எதிர்கொள்வது?

அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள, அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, 3 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மணி நேரம் உட்கார்ந்தே இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவும் கொழுப்பும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படு

கிறது. ஆனால், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, 3 நிமிடங்களுக்கு எழுந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் அதைத் தவிர்க்கலாம் எனப் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள கரோலின்ஸ்கா  கழக ஆய்வாளர்கள் 3 வாரம் ஆய்வு நடத்தினார்கள்

படிகள் ஏறி இறங்குவது, குதிப்பது, 15 அடிகள் எடுத்து வைப்பது கூட அலுவலக ஊழியர்களின் ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தியதாக நடுத்தர வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.

அதனால் வேலையிலும் தடை ஏற்படவில்லை. எனினும், அரை மணி நேரத்துக்கு 3 நிமிட உடற்பயிற்சி குறைந்தபட்ச அளவுதான் என்று இருப்பினும் இதனால் பிற்காலத்தில் ஏற்படும் உடற்பருமனால் ஏற்படும் பாதிப்புகள், நீரிழிவு மற்றும் மூட்டுவலி பிரச்சினைகளை தீர்க்க ஒரு காரணியாக அமையும்


No comments:

Post a Comment