மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா படுத்தும் பாடு! பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் மோசடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா படுத்தும் பாடு! பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் மோசடி

ரிக்சா தொழிலாளிக்கு ரூ. 3.47 கோடி வரி விதிக்கப்பட்ட அவலம்

லக்னோ,அக்.27- பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரிக்சா தொழிலாளி வருமான வரி யாக 3 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை தாக்கீது அனுப்பி யுள்ளது.  தன் பெயரில் நடத்தப் பட்டுள்ள மோசடி குறித்து நட வடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் ரிக்சா தொழிலாளி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்த விவரம் வருமாறு,

உத்தரப்பிரதேசத்தில் ரிக்ஷா தொழிலாளி பிரதாப் சிங். இவர் பாகல்பூர் பகுதியில் உள்ள அமர் காலனியில் வசித்து வருகிறார்.

தற்பொழுது வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் தங் களின் ஆதார் எண்ணையும், வருமான வரித்துறை அளிக்கும்பான்எனும் நிரந்தர கணக்கு எண்ணையும் இணைத்திட அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், வருமான வரி செலுத் துவதற்கான போதிய வருமானம் இல்லாதவர்களும்கூட வருமான வரித்துறையிடமிருந்து நிரந்த கணக்கு எண் கோரி விண்ணப் பித்து வரும் நிலை உள்ளது.

அதேபோல், வருமான வரித்துறையிடமிருந்து நிரந்தர கணக்கு எண் (பான்) கோரி விண்ணப்பித்திருந்தார் ரிக்சா தொழிலாளியான பிரதாப்சிங்.  வருமான வரித்துறையிடமிருந்து ரூ.3கோடியே 47லட்சத்து 54ஆயிரத்து 896 வருமான வரியை பிரதாப் சிங் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு அறிவிக்கை பெற்ற பிரதாப் சிங் அதிர்ச்சிக் குள்ளானார்.

அதனைத் தொடர்ந்து ஹைவே காவல் நிலையத்தில் தன்னுடைய பான் அட்டையைப் பயன்படுத்தி மோசடி செய்திருப்ப தாக பிரதாப் சிங் புகாரளித் துள்ளார்.

பிரதாப் சிங்கிடம்அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி, பான்  எண்ணைக் கேட்டுள்ளது. எனவே, கடந்த மார்ச் 15ஆம் தேதி பாகல்பூரில் உள்ள, தேஜ் பிரகாத் உபாத்யாய் என்பவருக்குச் சொந்தமான ஜன் சுவிதா கேந்தி ராவில் பான் அட்டைக்கு விண் ணப்பித்துள்ளார். பான் அட்டை யைப் பெறுவதற்கு சுமார் மூன்று மாதங்களாக அலைந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து பாகல் பூரைச் சேர்ந்த சஞ்ஜய் சிங் என்பவர் பான் அட்டையின் வண்ண நகலை பிரதாப் சிங்கிடம் அளித்ததாகவும், கல்வியறிவு இன்மையால், தன்னால் உண் மையான பான் அட்டை எது, நகல் எது என அடையாளம் காண முடியவில்லை என்று வேதனையுடன்  கூறுகிறார் பிரதாப் சிங்.

இந்நிலையிலேயே கடந்த 19.10.2021 அன்று வருமான வரித் துறையினரிடமிருந்து பிர தாப் சிங்குக்கு 3,47,54,896 ரூபாய் செலுத்துமாறு  அழைப்பு வந்துள் ளது. மேலும் அதற்கான தாக்கீ தும் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளிடம், தன் பெயரில் யாரோ ஜிஎஸ்டி எண்-அய் வாங்கி வியாபாரம் நடத்தி யுள்ளதாக கூறினார் பிரதாப். 2018 - 2019 காலகட்டத்தில் அந்த மோசடிப் பேர் வழியான அந்த வணிகரின் மொத்த வருடாந் திரஆண்டு விற்பனை மதிப்பு ரூ.43கோடியே 44லட்சத்து 36ஆயிரத்து 201 ரூபாயாக இருந்துள்ளது. பிரதாப்சிங் பெயரைத்   தவறாகப் பயன்படுத்தி இதுபோன்று மோசடி செய் துள்ளதாக காவல் நிலையத்திலிருந்து முதல் தகவல் அறிக் கையைப் பெற்று வருமாறு, வருமான வரித்துறையினர் அறி வுறுத்தியுள்ளதாகவும் பிரதாப் சிங் கூறியுள்ளார்.

இதுவரை ப்ரதாப் சிங்கின் புகார் அடிப்படையில் வழக்கு பதியப்படவில்லை என்றும், ஆனால் அவரது புகாரின் அடிப் படையில் விசாரணை நடத்தப் படும் என்றும் காவல் நிலைய அதிகாரியான அனுஜ் குமார் கூறி னார். இதற்கிடையில் வருமான வரித் துறையினரிடமிருந்து வந்த தாக்கீது தொடர்பான விவரங் களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் பிரதாப் சிங்.

ரிக்சா தொழிலாளிக்கு வரு மான வரித்துறையினர் ரூ.3 கோடிக்கு மேல் வரி செலுத்தக் கோரிய பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

No comments:

Post a Comment