சத்துணவு பணியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

சத்துணவு பணியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு

தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை,அக்.10-  தமிழ்நாடு அரசு முதன்மைச் செய லாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சரால், சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் 07.09.2021 அன்று ஏனையவற்றுக்கிடையே, “சத்துணவு மய்யங்களில் பணிபுரி யும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தப்படும்.  இதன் மூலம் தற்போது பணியிலிருக்கும் 29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன் பெறுவார்கள்என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு மய்யங் களில் பணிபுரிந்து வரும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களின் வயது முதிர்வில் ஓய்வு பெறும் வயதினை 58 லிருந்து 60 ஆக உயர்த்தி  ஆணை வெளியிடப்பட்டது.

இவ்வாணையினால் சத்துணவு மய்யங்களில் பணிபுரியும் 29,137 சமையலர்களும் மற்றும் 24,576 சமையல் உதவியாளர் களும் பயனடைவர். சத்துணவு மய்யங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஊக்கமுடன் பணியாற்றி செம்மாந்த முறையில் இத்திட்டத்தினை செயல் படுத்திட இந்த அரசாணை வழிவகுக்கும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதியோர் பராமரிப்பு மய்யம்

சென்னை, அக்.10- உலக மனநல நாள் ஆண்டு தோறும் அக்டோபர்

10-ஆம் தேதி அனுசரிக் கப்படுகிறது. இதனை முன் னிட்டு, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில்  அனை வரும் மனநலனை உறுதி செய்வோம்என்ற கோட் பாட்டுடன் மனநல நாள் அனுசரிப்பு மற்றும் மனநலம் பேணுதல் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கத்தை மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘விரைவில் முதியோர் தினசரி பராமரிப்பு மய்யம் மற்றும் இளையோருக்கான இணையதள அடிமை மீட்பு மய்யம் தொடங்கப்படவுள்ளது. இந்த கரோனா பேரிடர் காலத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்றவர்களுக்கு தொலைபேசி வாயிலாக 21 ஆயிரம் நோயாளிகளுக்கு மேல் மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மனநல மருத்துவ துறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்என்றார்.

No comments:

Post a Comment