யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்க பொதுக்குழு தமிழர் தலைவர் கி.வீரமணி, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 26, 2021

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்க பொதுக்குழு தமிழர் தலைவர் கி.வீரமணி, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்பு

*    ஜாதிவாரி கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு துவக்கிட வேண்டும்  

தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கிட உரிய சட்டம் தேவை

சென்னை, செப்.26 யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு மாநிலத்தின் 26-ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம் 25.9.2021 அன்று சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில்  காலை 11 மணிக்கு நடைபெற்றது.

இந்நல சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

பொதுக்குழு கூட்டத்தின் காலை நிகழ்ச்சியை மாநிலங்களவை தி.மு.. உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் துவக்கி வைத்து உரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை வழங்கினார்.

யூனியன் வங்கி சென்னை மண்டல துணைப் பொது மேலாளர்கள் கே.பி. மஞ்சுநாத், ஜிதேந்தர் மணிராம், பிராந்திய தலைவர்கள் என்.செழியன் (சென்னை தெற்கு), பிரிஜா பிரசாத் தாஸ் (சென்னை வடக்கு), திருமதி.சகாய ராணி ஜாஸ்மின் (சென்னை மேற்கு) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொதுச் செயலாளர் எஸ். நடராசன் நன்றியுரையாற்றினார்.

பின்னர் நடைபெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் கோ.கருணாநிதி, தலைவராகவும், எஸ். நடராசன், பொதுச் செயலாளராகவும், எம்.பாக்கியராஜ், துணைப் பொதுச் செயலாளராகவும், ஜி.சரஸ்வதி, பொருளாள ராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட

தீர்மானங்கள்:

பிற்படுத்தப்பட்டோர் நலன் சார்ந்த கீழ்

குறிப் பிட்டுள்ள கோரிக்கைகளை, ஒன்றிய அரசு உடன் நிறைவேற்றிட வேண்டுகிறோம்.

1.    ஜாதிவாரி கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு துவக்கிட வேண்டும்.

2.    பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கிட ஏது வாக, அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம்.

3.    தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கிட உரிய சட்டம்.

4.    ஒன்றிய பணியாளர் நலத்துறையின் 6.10.2017 தேதியிட்ட ஆணை, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு எதிராக உள்ளதால், அந்த ஆணையை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும்.

5.    கிரீமிலேயர் முறையை முற்றிலுமாக நீக்க வேண்டும். அந்த ஆணை வெளியிடும் வரை, தற்போது வழங்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் ஓராண்டு வரை தான் செல்லும் என்பதற்குப் பதிலாக, மூன்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

6.    வங்கி பணியாளர் தேர்வு கழகம், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாளர் தேர்வு மற்றும் யு.பி. எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஆணையம் நடத்தும் தேர்வுகள், தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்.

7.    எல்.அய்.சி., வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் கொள்கையை கைவிடுக.

வங்கி நிர்வாகத்திற்கு கோரிக்கைகள்:

1.    பதவி உயர்வுக்கு முன்பாக இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர்களுக்கு எட்டு நாள்கள் பயிற்சி வகுப்பு களை வங்கியே நடத்திடவேண்டும்.

2.    தமிழ்நாட்டில் பணியாற்றும் வெளி மாநில அதிகாரிகள், தமிழ் மொழியைக் கற்றிடவும், அதன் வழியே, வாடிக்கையாளர் சேவை செய்திடவும் வசதியாக, அதிகாரிகளுக்கு தமிழ் மொழி கற்றிட உரிய வாய்ப்புகள் அளித்திட வேண்டும்.

3.    வங்கி பணியாளர் தேர்வுக் கழகத்தின் வழியே வங்கியில் நேரடி நியமனம் செய்து தமிழ்நாட்டில் பணியாற்றிட நியமிக்கப்படும் கிளார்க்குகளுக்கு, தமிழ் மொழி அறிவு -  பேச, எழுத, படிக்க, கண்டிப்பாக இருத்தல் வேண்டும். தமிழ் மொழி தெரியும் என்று பொய்யாகத் தகவல் தந்து பணியில் சேரும் விண்ணப் பதாரரின் மனுவை வங்கி நிராகரிக்க வேண்டும்.

4.    தமிழ்நாட்டில் உள்ள நமது வங்கி கிளைகளில் உள்ள வாடிக்கையாளர் பயன்பாட்டு படிவங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.

5.    யூனியன் வங்கி மத்திய நிர்வாகம், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்க நிர்வாகிகளுடன் காலாண் டுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தையினை, மத்திய மற் றும் மண்டல / பிராந்திய நிர்வாகத்துடன் நடத்தும் வகையில் உரிய ஆணையை வழங்க வேண்டும்.

6.    நமது தோழர்களின் மாற்றல் உத்தரவு வழங்கு வதிலும், பதவி உயர்வில் பணியிடம் மாற்றல் கிளைகள் வழங்குவதிலும், மண்டல / பிராந்திய நிர்வாகங்கள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என நிர்வா கத்தை வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment