பெங்களூரு பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியரின் ஹிந்தி மொழி ஆதிக்கம் குறித்த சமூக வலைதளப் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 25, 2021

பெங்களூரு பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியரின் ஹிந்தி மொழி ஆதிக்கம் குறித்த சமூக வலைதளப் பதிவு

நான்  கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, துளு, ஆங்கிலம் என பல்மொழி கற்றவன் கன்னட மொழி குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவன்தமிழ்நாடு போல ஆட்சி செய்யணும்னுதான் நாங்களும் விரும்புகிறோம்...

அங்கே கலைஞர் கருணாநிதியும்  ஜெயலலிதாவும் அருமையான கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தாய்மொழிப்பற்று கலாச்சாரப் பாதுகாப்பு தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பை தடுத்து நிற்கிறது. ஹிந்தி - கலாச்சாரத்தை தாய்மொழியை அழித்துவிடும். ஆனால் தற்போது தமிழ்நாட்டிலும்  வடமாநில ஆதிக்கம் ஊடுருவி உள்ளதை பார்க்க முடிகிறது, அங்கு ஹிந்தி ஆட்கள் சிறு நகரங்களில் கூட பரவிவிட்டனர்.

இது எங்களுக்கு வேதனையாக உள்ளது  எங்கள் நிலையைப் பாருங்கள்,   இங்கு பெங்களூருவில்  ஹிந்தி மொழி ஆதிக்கம் வந்து பல காலமாகிடுச்சி.

கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி இப்ப எங்களால சமாளிக்க முடியாத அளவு ஆக்கிரமிச்சிட்டாங்க. அவன் வடநாட்டுல எங்கிருந்தோ இங்க வந்து ஹிந்தில பேசறான்.   எனக்கு ஹிந்தி மட்டுந்தான் தெரியும்னு ஆணவமா சொல்கிறான். கன்னடம் தெரியாது - எங்களையும் ஹிந்தி பேச மறைமுகமாக வற்புறுத்துகிறான், எவரும் உலகத்துல எங்க போனாலும் அந்த பிரதேச மொழியில பேசறதுதான் வழக்கம்.  ஆனா இங்க மட்டும் அவனுக்காக நாங்க எங்க தாய்மொழிய விட்டுவிட்டு அவன்கிட்ட ஹிந்தில பேசற நிலைமைக்கு வந்துட்டோம்.  மொழிங்கறது வெறும் பேச்சு அல்ல, அது வாழ்வாதாரம்  நாங்க அந்தப் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டோம்.

இப்போது கருநாடக தலைநகர் பெங்களூருவில் கன்னடம் வெறும் கடைகளின் போர்டுகளில் மட்டுமே உயிர்வாழ்கிறது, கடைவீதிகளில் கூட ஹிந்தி அதிகம் பேசுகிறார்கள். இதனால் நாங்கள் எங்கள் மண்ணிலேயே அந்நியனைப் போல் உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.

 முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா  முறைசாரா தொழிலாளர்கள்  கன்னடர்களாகத்தான் இருக்க வேண்டும் என சட்டம் கொண்டுவர முயற்சித்தார்.  அவரது ஆட்சியைக் கவிழ்க்க இதுவும் முக்கியமான அடிப்படைக் காரணம் ஆகும். தமிழ்நாடு மாதிரி மாநிலத்தின் நலன் சார்ந்த கட்சிகளை நாங்க ஆதரிக்காமல் தேசியகட்சிகளை ஆதரித்ததால்தான் எங்களின் மண்ணிலேயே அந்நியராக மாற்றப்பட்டுவிட்டோம்.

முழுமுதல் காரணம் தமிழ்நாடு போல் இருமொழிக் கொள்கை இல்லாமல் மும்மொழிக் கொள்கையை ஏற்றது, நவோதயா பள்ளி ஆரம்பிச்சா ஒன்றிய அரசு அதிக நிதி தரும் என்று ஆசைகாட்டியதால் நவோதயாவை அனுமதித்தது. ஹிந்தி, நவோதயா போன்றவைகளால் எந்த நன்மையும் கிடையாது. இவை இரண்டும் நமது மண்ணில் வடக்கு ஆதிக்கத்தை அதிகப்படுத்தும் ஆரம்பகால அடித்தள வேலை என்பதை நினைக்கவேண்டும்

ஹிந்திக்காரர்களை ஹிந்தி பேசாத மாநிலத்திற்குள் திணிக்கத்தான் இந்த அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் இதில் மிகவும் முக்கியமானது, இதன் மூலம் ஹிந்திக்காரர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு வாழ்வாதாரச்சிக்கல் ஏற்படாது உள்ளூரில் எதிர்ப்பு இருந்தாலும் அவர்களுக்குத் தேவையானதை கொடுக்கவே இந்த ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்

நமது பிள்ளைகளுக்கு  ஹிந்தி  ஆர்வத்தை ஊட்டினால் வடக்கில் உள்ளவர்கள் நமது ஊருக்குள்  ஊடுருவுவதும் தமது ஆட்களை தென் மாநிலங்களில் குடியேற்றுவதும் எளிதாகிவிடும்...

ஒருவேளை வடமாநிலத்துக்கு யாராவது வேலைக்கு போனால் அவர்கள்  தானாக  ஹிந்தி கற்றுக்கொள்வார்கள்.  மும்மொழிக் கொள்கையை ஆதரிக்காதீர்கள்.  தேசிய கட்சிகளை ஆதரிக்காதீங்க. இதெல்லாம் செய்தால் உங்க,வாழ்வாதாரமே சீரழிஞ்சிடும்.

ஹிந்திக்கு நாம் வழிவிட்டால்   உங்க தலைமுறைக்கு பிறகு உங்க இனமும் அவனுக்கு அடிமைப்பட்டு போய்விடும்,  மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் வாழ்பவருக்கு மராத்தி கொஞ்சம் கூட தெரிய வேண்டிய அவசியம் இல்லை.  நாங்கள் ஓரளவுக்கு மொழிகளின் வரலாறும், மானுடவியலும் படித்தவர்கள் . ஹிந்தியோ சம்ஸ்கிருதமோ  தமிழ்மண்ணில் வளர்ந்தால், தமிழ் தானாக அழிந்துவிடும் ஆபத்து உள்ளது, வரலாற்று சிறப்பு மிக்க மொழிகளான ராஜஸ்தானி, அரியானி, மகத போன்ற மொழிகளை வெறும் 40 ஆண்டுகளில் ஹிந்தி அழித்துவிட்டது.

தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் புகுந்ததால் தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகள் உருவாகின.

இந்த வரலாறு எதுவும் அறியாமல் பி.ஜே.பி கட்சியைச் சார்ந்த தமிழர்கள், மும்மொழித் திட்டம் சிறப்பானது, எனப் பேசி வருகின்றனர்.

 நாளைக்கு உங்கள் மனசாட்சி உங்களைத்தாய் மொழித் துரோகிஎன குற்றச்சாட்டும் நிலைக்கு ஆளாகி விடாதீர்கள்.

ஒரு மொழி தோன்றிய பின்னரே மதம், கடவுள், ஜாதி, கலாச்சாரம் பண்பாடு ஆகிய எல்லாம் தோன்றும்! ஆனால் பயத்தின் விளைவால், நாம் கடவுளின் பால் காட்டும் ஈடுபாட்டில், சிறிதளவு கூட தாய்மொழி மேல் காட்டுவதில்லை. தாய் மொழி மறந்த சமூகம் அடிமைச் சமூகமாக மாறும் என்பது திண்ணம்! இதுவே கடந்த கால வரலாற்று உண்மை!

இவ்வாறு அந்த சமூகவலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment