தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துக! - தொல்.திருமாவளவன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துக! - தொல்.திருமாவளவன்

சென்னை, செப்.27 எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் நடக்காமல் தடுக்க வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதே வழியாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசி டம்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து விடுதலைச் சிறுத் தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  வெளியிட்டுள்ள அறிக்கை:

கடலூர் மாவட்டம் புதுக்கூரைப் பேட்டை கண்ணகி - முருகேசன் ஜாதிமறுப்புத் திருமணத் தம்பதி யினரை ஆணவப் படுகொலை செய்த வழக்கில் கடலூர் அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். அதேவேளையில், மேல்முறையீட்டில் குற்றவாளிகள் தப்பித்து விடாதவகையில் இந்த வழக்கை உரிய முறையில் நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் சார்பில் தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

ஆணவக் கொலைகளைத் தடுப் பது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்ற அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

ஆணவக் கொலைகளைத் தடுப் பதற்காகவும், அதனால் பாதிக்கப்படு கிறவர்களுக்கு நிவாரணம் அளிப்ப தற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடு படுகிறவர்களைத் தண்டிப்பதற் காகவும் சிறப்பு சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்றவேண்டும் என அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. அப்படி யான சட்டம் இயற்றப்படும் வரை ஒன்றிய மாநில அரசுகள் கடைப் பிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறி முறைகளையும் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

தடுப்பு நடவடிக்கைகள், நிவா ரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப் புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது.

ஆணவக் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளை மாநில அரசுகள் உடனடியாகக் கண்டறிய வேண்டும்: அந்தப் பகுதிகளின் காவல் அதிகாரிகளுக்கு அதுகுறித்து விழிப்போடு இருக்குமாறு அறிவு றுத்த வேண்டும்; அந்தப் பகுதிகளில் எங்காவது ஜாதிப் பஞ்சாயத்து  கூட்டம் கூடுவதாக செய்தி கிடைத் தால் அதை உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டும்; செய்தி கிடைத்ததும் காவல்துறை கண் காணிப்பாளர்  மட்டத்தில் உள்ள அதிகாரி அந்தப் பகுதிக்குச் சென்று ஜாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடக்கூடாது என மக்களிடம் எடுத்துரைக்கவேண்டும்; அதையும் மீறி ஜாதிப் பஞ்சாயத்து நடந்தால் அங்கேயே காவல்துறை கண்காணிப் பாளர் இருக்கவேண்டும்; அந்தப் பஞ்சாயத்தின் நடவடிக்கைகளை காட்சிப் பதிவு செய்யவேண்டும்; அந்த கூட்டம் சட்டவிரோதமான முடிவுகளை எடுப்பதற்காகத்தான் கூடுகிறது என காவல்துறை கண்காணிப்பாளர் சந்தேகித்தால் அதைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம், பிரிவு 151-இன் கீழ் கைதும் செய்யலாம். ஆணவக் குற்றங்கள் தொடர்பான விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒன் றின் அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளோடு இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்துள்ளார்.

No comments:

Post a Comment