தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம்

1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்!

சென்னை,செப்.27- தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் முன் னிலையில், இன்று (27.9.2021) தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்க சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரை வேட் லிமிடெட்-க்கான ஒப்பந்த உத்தரவை போயிங் இந்தியா நிறுவனத்தின் விநியோக மேலாண்மை இயக்குநர் அஸ்வனி பார்கவா வழங்க, ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர். சுந்தரம் பெற்றுக்கொண்டார்.

இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தரம், துல்லியம் மற்றும் கூட்டு கலாச்சாரத்தின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும். ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் போயிங் இடை யேயான ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும். இது சேலம் மற்றும் ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாடு பாது காப்பு தொழில் வழித்தடத்திலுள்ள வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும்.

ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், ரூ. 150 கோடி முதலீட்டில் அடுத்த 24 மாதங்களில் ஓசூரில் 1,25,000 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத் தளத்தில் சிவில் ஏரோஸ்பேஸ் உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய உற்பத்தி வசதி யையும் தற்போது சேலத்தில் அமைந்துள்ள உற்பத்திக் கூடத்தை 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரிவுபடுத்தவும் திட்டமிட் டுள்ளது. இந்த கூடுதல் வசதி 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்.

இந்த சாதனை தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களின் தொலைநோக்கு பார்வையானதமிழ்நாட்டில் தயாரிக் கப்பட்டது” (Made in Tamil Nadu) என்பதின் ஒரு படியாக அமையும்.  இந் நிகழ்வின்போது, ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர்  முனைவர் வெ.இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செய லாளர் வி.அருண் ராய் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment