அனைத்துக் கட்சி கூட்டத்தின் நோக்கம் என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 22, 2021

அனைத்துக் கட்சி கூட்டத்தின் நோக்கம் என்ன?

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் - நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்குக் கோரும்  தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டம் நடைபெற்றது. (21.9.2021)

கூட்டத்தில் கீழ்க்கண்ட கட்சிகளின் தலைவர்கள், பொறுப்பாளர் கள் பங்கு கொண்டு கருத்துக்களை எடுத்துக் கூறினர்.

1. ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

2. .இராசா, துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்

3. .கோபண்ணா, செய்தித் தொடர்பாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

4. தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி,

5. .வந்தியத்தேவன், அமைப்புச் செயலாளர்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

6. கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

7. டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

8. கே..எம்.முகம்மது அபுபக்கர், மாநிலப் பொதுச்செயலாளர்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

9. எம்.எச்.ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

10. சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

11. பு.பா.பிரின்சு கஜேந்திரபாபு, பொதுச்செயலாளர்,

 பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

12. கோ.கருணாநிதி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு

13. சத்ரியன் வேணுகோபால், துணைப் பொதுச்செயலாளர்,

      தமிழக வாழ்வுரிமைக் கட்சி

14. கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்

15. வீ.குமரேசன், பொருளாளர், திராவிடர் கழகம்

16. வீ.அன்புராஜ், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

17. வன்னிஅரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி

18. ஆறுமுக நயினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

19. .பாலசிங்கம், தலைமை நிலைய செயலாளர், விசிக

20. யாக்கூப், மனிதநேய மக்கள் கட்சி,

21. .சிங்கராயர், மாநில துணைப் பொதுச்செயலாளர்,

     திராவிட இயக்கத் தமிழர் பேரவை,

கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

'நீட்' அச்சத்தினால் தற்கொலை செய்து கொள்ளும் இருபால் மாணவர்களும் - அத்தகைய முடிவுகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், அத்தகு அவசர முடிவுகள் பெற்றோர், உற்றார் உறவினர்களுக்கும் பெரும் வேதனையை உண்டாக்கும் என்றும் எடுத்துக் கூறியதுடன், தற்கொலை எந்த வகையிலும் தீர்வாகாது என்றும், போராடி வெற்றி பெறும் உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வது முதல் தீர்மானம் ஆகும். இதுவரை 17 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை அசாதாரணமானது. இதுகுறித்து எல்லாம் மக்கள் நல அரசு என்ற நிலையில் ஒன்றிய அரசு கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டாமா?

யாருக்காக இந்த 'நீட்' தேர்வு? 'நீட்' தேர்வுதான் தகுதி திறமைக்கே அளவுகோல் என்பதை எந்தக் கல்வியாளரும் ஏற்றுக் கொள்வதில்லை.

'நீட்' தேர்வு மூலம் மருத்துவர்கள் ஆனவர்கள்தாம் திறமையான மருத்துவர்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?

+2 தேர்வு மதிப்பெண் மூலம் மருத்துவர் ஆனவர்கள் திறமையற்ற வர்களா? +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவர்கள் ஆன வர்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர்களாக ஒளி வீசுகிறார்களே!

கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் 'ரேலா' போன்றவர்கள் +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவராக - உலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணராக ஜொலிக்க வில்லையா?

தற்போதைய நடைமுறையால் - தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப் பட்டவர்களும், கிராமப்புற மக்களும் மருத்துவர்களாகப் பெரும் எண்ணிக்கையில் படித்து வெளி வருவதைப் பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் - குறிப்பாகப் பார்ப்பனர்கள், இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்த 'நீட்' ; அதுவும் சி.பி.எஸ்.. கல்விக் கூடங்களில் படித்தவர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில், இந்த 'நீட்'  தேர்வு முறை அமைந்துள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

எடுத்துக்காட்டாக 2016-2017இல் சி.பி.எஸ்.. பாடத் திட்டத்தில் +2 அடிப்படையில் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் கிடைத்த இடங்கள் வெறும் 62; 2017-2018இல் 'நீட்' தேர்வு காரணமாக சி.பி. எஸ்..இல் படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1220. அதாவது கூடுதலாகப் பெற்ற இடங்கள் 1158.

இதிலிருந்து 'நீட்' தேர்வு என்பது யாருக்குப் ()லன் அளிக்கக் கூடியது என்பது எளிதாகவே இலங்கும்.

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.. படிக்கும் மாணவர்கள் வெறும் 10 விழுக்காடே! இந்த 10 விழுக்காடு மாணவர்களுக்காக 90 விழுக்காடு மாநில அரசின் கல்வித் திட்டத்தில் படிப்பவர்கள் பலியாக வேண்டுமா?

பிரச்சினை பெரிதாக வெடித்துக் கிளம்பிய நிலையில் ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் என்ன சொன்னார்?

இந்தியா முழுவதும் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களை மனதிற் கொண்டு மாநிலப் பாடத் திட்டங்களிலிருந்து 'நீட்' கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படும் என்ற சொன்னாரா இல்லையா? (18.1.2018).

இப்படி சொன்ன அதே ஒன்றிய அமைச்சர் மூன்றே நாள்கள் இடைவெளியில் (21.1.2018) என்ன கூறினார்?

மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுவதும் சி.பி.எஸ்.. பாடத் திட்டத்தின் படியே 'நீட்' கேள்வித்தாள் தயாரிக்கப்படும் என்றது ஏன்?

இதன் பின்னணியில் இருப்பது - பார்ப்பனர்களும் - சமூகநீதிக்கு எதிரான ஆர்.எஸ்.எசும் தானே.

எனவே மிகப் பெரிய சதியில் திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ள 'நீட்'டை ஒழிக்க வெகு மக்கள் திரள வேண்டும்! வேண்டும்!!

திராவிடர் கழகம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நோக்கம் இதுவே!

No comments:

Post a Comment