உலகின் தூய்மையான பகுதியாக கோவளம் கடற்கரை பராமரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

உலகின் தூய்மையான பகுதியாக கோவளம் கடற்கரை பராமரிப்பு

சென்னை, செப்.27 உலகின் தூய்மையான கடற்கரையாக கோவளம் கடற்கரை பரா மரிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ மெய்யநாதன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சிவ மெய்யநாதன் வெளியிட்ட அறிக் கையில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி சுமார் 1,076 கி.மீ. நீளம் கொண்டது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற் கரைக்கு இந்தியாவின் 9-ஆவது நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் கடந்த 21-ஆம் தேதி வழங்கப் பட்டது. உலகளவில் பாதுகாப்பு மற்றும் தூய்மையான கடற்கரை களைத் தேர்ந்தெடுத்து, டென் மார்க் நாட்டைச் சேர்ந்த சுற் றுச்சூழல் அமைப்பு, நீலக்கொடி கடற்கரை (ப்ளு பிளாக் பீச்) என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.

இதற்கான தூய்மைப் பணி களை சுற்றுச்சூழல் துறை மேற் கொண்டு வருகிறது. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் வகையில் கடற்கரையில் பசுங்கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வை யாளர்களுக்கு பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

பொழுதுபோக்கு அம்சங்கள்

பாதுகாப்பான நீச்சல் மண் டலம், உடைமாற்று பகுதி, சாய்ந் திருக்கும் மூங்கில் நாற்காலிகள், நிழற்குடைகள், வெளிப்புற உடற் பயிற்சி உபகரணங்கள், குழந் தைகள் விளையாடும் பகுதி, மூங் கிலால் செய்யப்பட்ட குப்பைத் தொட்டிகள், கழிப்பறை மற்றும் 7 நிலை சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்கும் கருவிகள் அமைக் கப்பட்டுள்ளன.

மணல் சுத்தம் செய்யும் எந் திரத்தைப் பயன்படுத்தி கடற் கரை மணல் தொடர்ந்து சுத்தம் செய்யப்படுகிறது. கடற்கரையின் முக்கிய ஈர்ப்பாக இருப்பது, நீராடும் மண்டலத்தில் பாதுகாப் பாக நீந்தக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கான ஆம்பிபியஸ் சக்கர நாற்காலி ஆகும். கடற்கரையில் குளிப்பதற்கான காலம் ஜனவரி 15-ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிவரை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை மற்றும் நீரோட்ட நிலை யைப் பொறுத்து இக்காலம் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment