அவிநாசியில் தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

அவிநாசியில் தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட கலந்துரையாடலில் தீர்மானம்

அவிநாசி, செப். 3- தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் 30.8.2021 அன்று அவிநாசி அவிநாசியப்பா மரக்கடையில் பகுத்தறிவாளர் கழக தலைவர் .இராமசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தில் .பொன்னுசாமி முன்னிலை ஏற்க பு..பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக பேச்சாளர் வெ.குமாரராஜா சிறப்புரையாற்றினார், மேலும் விழாவில் வைத்தியலிங்கம், பெருமாள், வீரப்பன், முத்துசரவணன், ஜெயராஜ், ராமு, தேவநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தீர்மானங்கள்

1) வருகின்ற 17.9.2021 அன்று தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்த நாளை அவிநாசி நகரம், ஒன்றியத்தில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

2) அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உத்தரவு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்து. அண்ணாவின் ஆசைத்தம்பி, தந்தை பெரியாரின் பகுத்தறிவுக்க காவலர் கலைஞர் அவர்களின் தனையர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சியின் 100ஆவது நாள் சாதனையாக தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கோரிக்கையை நிறைவேற்றி தமிழ்நாடு அரசின் உத்தரவாக உலகிற்கே அறிவுறுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அவிநாசி நகரத் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment