இந்தியா-ஆப்கன் இடையே அரசியல், வர்த்தக உறவை பேண விருப்பமாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

இந்தியா-ஆப்கன் இடையே அரசியல், வர்த்தக உறவை பேண விருப்பமாம்

காபூல், ஆக. 31- இந்தியா -- ஆப்கானிஸ் தான் இடையிலான பெருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவு களை தொடர்ந்து பேண விரும்பு வதாக, தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் சுமார் 500 திட்டங் களை மேற்கொள்ள 3 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.22,000 கோடி) இந்தியா முதலீடு செய்து உள்ளது. இந்நிலையில் இருநாடுக ளுக்கு இடையிலான உறவு குறித்து ஷேர் முகமது அப்பாஸ் தெரிவித்து உள்ளதாவது:

தெற்காசியாவில் இந்தியா முக் கியமான நாடாக உள்ளது. அந் நாட்டுடன் ஆப்கனுக்கு உள்ள அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளுக்கு தலிபான்கள் மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம். அவற்றை தொடர்ந்து பேண விரும்புகிறோம்.

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த நிர் மாணிக்கப்பட்ட வான் வழித்தடம் மீண்டும் திறக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் வழியாக இந்தியா - ஆப்கன் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்டின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி யில், கடந்த 1980ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வெளிநாட்டு ராணுவ வீரர் என்ற முறையில் ஷேர் முகமது அப்பாஸ் பயிற்சி பெற்றார். அவர் ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் இணைந்த நிலையில், பின் அந்தப் பணியில் இருந்து விலகி தலிபான்களுடன் இணைந் தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

No comments:

Post a Comment