ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய தருணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 27, 2021

ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய தருணம்!

டில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தி லிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைக்கான பாடப்பிரிவில் பிரபல மேற்குவங்க எழுத்தாளரும் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகள் மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளும் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில், இவர்களின் படைப்புகள் பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோச னைக்குப் பின் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுவும் ஆங்கில துறையைச் சேர்ந்த பேராசிரியர் களுக்கு தெரியாமல் இரவோடு இரவாக இந்த படைப் புகள் நீக்கப்பட்டுள்ளது - பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

நீக்கப்பட்ட படைப்புகளுக்குப் பதிலாக சுல்தா னாவின் கனவுகள் மற்றும் ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி.யும்.,

மதுரை மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசனும் தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ''டில்லி பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. பொது சமூகத்தில் அழுத்தமான சலனங்களை தங்களது படைப்புகள் மூலம் ஏற்படுத்திய இவர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

தனது படைப்புகள் நீக்கப்பட்டது குறித்து எழுத்தாளர் சுகிர்தராணி கூறுகையில்,

டில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில பாடத்திட்டத் திலிருந்து எனது படைப்புகள் நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட சமூக எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டு, உயர் வகுப்பினர் படைப்புகள் சேர்க்கப்படுகிறது. இதில் ஜாதிய பின்புலம் தான் இருக்கக்கூடும்.ஒரு எழுத்தா ளராக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

டில்லி பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்து மகாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி   போன்ற தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, பெண்ணிய படைப் பாளிகளின்  படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது, பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூக மக்களுக்கு எதிரான  பிஜேபி - ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கை என்று கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பா... மற்றும் சங்பரிவார்களின் இந்துத்துவ வருணா சிரமக் கோட்பாட்டைத் தெரிந்தவர்களுக்கு இது ஆச்சரியமானதாக இருக்க முடியாது. ஆனாலும் இதனை எதிர் கொண்டு முறியடிக்க வேண்டியது சமூகநீதியாளர்களின் அடிப்படைக் கடமையாகும்.

பா... - சங்பரிவார்களிலே உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் இதற்கு மேலும் விழித்துக் கொள்ளவில்லை யென்றால், அது மிகப் பெரிய கெட்ட வாய்ப்பே!

உத்தரப்பிரதேச முதல் அமைச்சராக இருக்கக் கூடிய சாமியார் ஆதித்யநாத் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வாழும் பகுதிகளுக்குச் செல்லும் பொழுது அவர்களுக்கு சோப்பும், வாசனைத் திரவியங்களும் கொடுக்கப்பட்டன என்பதைப் புரிந்து கொண்டால் காவிகளின் கபடத் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள ஒன்றை சாதாரணமாக  எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் மக்கள் சக்தியைக் காட்ட வேண்டிய தருணம் இதுவே.

No comments:

Post a Comment