நிதிநிலை அறிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

நிதிநிலை அறிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, ஆக.2 மக்களுக்கு பயன் தரும் வகையில் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கை அமைய வேண்டும் என அமைச்சர் மற்றும் துறை உயர் அதிகாரி களுக்கு முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (1.8.2021)வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தி.மு.. அளித்த தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன் முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள், விவசாய நிபு ணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்து விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதல் அமைச்சர் அமைச்சர் பெருமக்களுக் கும் அரசு உயர் அலு வலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

மேலும், பொது நிதிநிலை அறிக்கையினை பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆகியோ ரைக் கலந்தாலோசித்து அவர்களிட மிருந்து பெறப்பட்டக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு மக்களின் வாழ்வில் புதிய மறு மலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்த நிதிநிலை அறிக்கையினை தயாரிக்க அமைச்சர் பெரு மக்களையும், அரசு உயர் அலுவலர் களையும் அறிவுறுத்தினார்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment