இணைய வழி விளையாட்டைத் தடை செய்ய விரைவில் புதிய சட்டம் : அமைச்சர் எஸ். ரகுபதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

இணைய வழி விளையாட்டைத் தடை செய்ய விரைவில் புதிய சட்டம் : அமைச்சர் எஸ். ரகுபதி

சென்னை, ஆக.5 அவசர கதியில் அதிமுக நிறைவேற்றிய இணைய விளையாட்டுகள் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் முதல மைச்சர் ஆணைக்கு இணங்க விரைவில் புதிய சட்டம் இயற்றப் படும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (4.8.2021)  அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

‘’இணையவழி ரம்மி விளை யாட்டைத் தடை செய்ய வேண் டும் எனத் திமுக சார்பில் முதல மைச்சர் முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலி யுறுத்தியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி இணை வழி ரம்மி விளை யாட்டிற்குத் தடை விதித்து அவசர கதியில் சட்டம் ஒன்றை அதிமுக அரசு நிறைவேற் றியது.

அதிமுக அரசின் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக் கில், தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை வழக்குரைஞர் வாதிட்டு, உரிய கருத்துகளை ஆணித்தரமாக எடுத்து வைத்த போதிலும், இந்த விளையாட் டுகள் ஏன் தடை செய்யப்படு கின்றன என்பது குறித்துப் போதுமான காரணங்களைச் சட்டம் நிறைவேற்றும்போது கூறவில்லை; விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் இணைய விளையாட் டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடைவிதிக்க முடியாது என்று கூறி, தமிழ்நாடு அரசின் இணைய வழி ரம்மி விளையாட்டைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக் கிப் புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இதே தீர்ப்பில் தெளிவுபடுத்தி யிருக்கிறது.

அமைச்சர் எஸ். ரகுபதி

பொது நலன் மிக முக்கியம் என்பதால், உரிய விதிமுறைகள் மற்றும் தகுந்த காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, எவ் விதத் தாமதமும் இன்றி, இணைய வழி ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என முதலமைச்சர் 30.8.2021 அன்று தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டிருக்கிறார்.

ஆகவே, முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் இணைய வழி ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய் யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்‘’. இவ்வாறு அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment