சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட கால்வாய் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட கால்வாய் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மேட்டூர், ஆக.2  மேட் டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய காலத்தில் நேற்று  (1.8.2021) மேட்டூர் அணையில் இருந்து தண் ணீர் திறந்து விடப்பட் டது. இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள் ளிட்ட மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என சேலம் மாவட்ட ஆட் சியர் தெரிவித்தார்.

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு நேற்று மேட்டூர் அணை யில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கால்வாய் பாசனத் துக்கான தண்ணீரை சேலம் ஆட்சியர் கார் மேகம் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 230 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

சுமார் 13 ஆண்டு களுக்குப் பின்னர் மேட் டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள் ளது. விவசாயிகள் பாசன நீரை முழு அளவு பயன் படுத்தி, கூடுதல் விளைச் சல் பெற வேளாண்மைத் துறை சார்பில் அறிவு ரைகள் வழங்கப்பட்டுள் ளன.

விதை நாற்றுகள், உரம், இடுபொருட்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டு போதிய முன் நடவடிக்கை மூலம் விவசாயப் பணிகள்மிகத் துரிதமாக தொடங்கப் படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேட்டூர் அணையில் இருந்து முதல்கட்டமாக விநாடிக்கு 300 கனஅடி என்ற அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட் டுள்ளது.

இதனிடையே மேட்டூர் அணைக்கு 2 நாட்களுக்கு முன்புவிநா டிக்கு 22 ஆயிரத்து 942 கனஅடியாக இருந்த நீர் வரத்து 31.7.2021 அன்று 21 ஆயிரத்து 692 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவையை பொறுத்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வரு கிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விநா டிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்த நிலை யில், ஜூலை 31-ஆம் தேதி முதல் விநாடிக்கு 14 ஆயி ரம் கனஅடியாக அதிக ரிக்கப்பட்டது. 81.97 அடி யாக இருந்த நீர்மட்டம் நேற்றுமுன்தினம் காலை 82.65 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 44.64 டிஎம்சி-யாக உள்ளது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment