மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு ஈடாக வழங்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை எவ்வளவு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு ஈடாக வழங்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை எவ்வளவு?

மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி

புதுடில்லி, ஆக.1 பொருட்கள் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கப் பட்டதன் மூலம் மாநில அரசு களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு ஈடாக மாநிலங் களுக்கு வழங்கப்பட்ட இழப் பீட்டுத் தொகை எவ்வளவு? என்று நாடாளுமன்ற மாநிலங் களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா கேள்வி எழுப் பினார். நாடாளுமன்ற மாநிலங் களவையில் திமுக குழுத்தலைவர் திருச்சி சிவா 27.7.2021 அன்று எழுப்பிய கேள்வி வருமாறு

நிதித்துறை அமைச்சர் கீழ்க் கண்ட கேள்விக்கு பதில் அளிப் பாரா? () மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.டி. பணப் பட்டுவாடாக்கள் மற்றும் இன்னும் நிலுவையில் உள்ள தொகைகள் மற்றும் அதன் விபரங்களைத் தெரிவிக்கவும்.

() மாநிலங்களுக்கு வழங் கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. பணப்பட்டுவாடா முழுவதும் எப்போது நிறைவடை யும் என்று அரசு எதிர் பார்க்கிறது? இது தொடர்பாக மாநில வாரியாக உள்ள கால அளவு என்ன? இவ்வாறு திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்தரி அளித்த பதில் வருமாறு,

() மற்றும் () : ஜி. எஸ்.டி. (மாநிலங்களுக்கு இழப்பீடு) பிரிவு 8இன்படி விதிக்கப்பட்ட இழப்பீட்டு வரி செல்லு படியாகாத நிலையற்ற நிதியாக ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிதி என்ற பெயரில் மாற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிரிவு 10(1)ல் குறிப்பிட்டுள்ளபடி இந்தியா வின் பொதுக் கணக்கில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இச்சட்டத்தின் 10(2) பிரிவின்படி ஜி.எஸ்.டி.யை 5 ஆண்டு களுக்கு அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் எந்த வருவாய் இழப்பும் இந்த நிதியின் மூலம் ஈடு செய்யப்படும். ஜி.எஸ்.டி. நிதி இழப்பீடு நிதி ஆண்டுகள் 2017- - 2018, 2018-  -2019 மற்றும் 2019 - 2020 ஆகிய வற்றுக்கு ஏற்கெனவே மாநிலங் களுக்கும், யூனியன் பிரதேசங் களுக்கும் வழங்கப்பட்டு விட் டது. முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு ஜி.எஸ்.டி. வசூல் குறைந்ததால் கூடுதலாக இழப்பீடு அளிக்க வேண்டிய நிலையை ஏற்படுத் தியது. அதே வேளையில் ஜி.எஸ்.டி. இழப்பீட்டு வரி வசூலும் குறைந்து விட்டது. எனவே, ஜி.எஸ்.டி. இழப்பீடு எல்லா மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ.91,000 கோடி ஏப்ரல் முதல் 2021 மார்ச் மாதம் வரையிலான காலத்திற் காக வழங்கப் பட்டது. இதற் கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிதியை முழுமையாகச் செலுத் துவதற்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிதி போதுமானதாக இல்லாத தால் இன்னமும் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு நிதி 2021 மார்ச் வரை ரூ.81179 கோடியும், 2021 ஏப்ரல் மற்றும் மே மாதங் களுக்கு ரூ.55,345 கோடி யாகவும் உள்ளது. மாநி ங் ளு க் கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிதி வழங்கும் பிரச்சினை ஜி.எஸ். டி.யின் 41 மற்றும் 42ஆவது கவுன்சில் கூட்டங் களில் எழுப்பப்பட்டது. அதன்படி, ஒன்றிய அரசு இழப்பீட்டு நிதியில் போதுமான அளவுக்குக் குறைவான இருப்பு காரணமாக ஒரு சிறப்பு சாளரத்தின் மூலம் ஒன்றிய அரசு ரூ.1.1 லட்சம் கோடி கடன் வாங்கி மாநிலங் களுக்கு ஏற்படும் வருவாய் குறைந்த இழப்பீடு வழங்கியதால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கு உடனுக்குடன் வழங்கப்பட்டது. இந்த ஏற்பாடு மாநிலங்களுடன் விரிவான விவாதங்கள் நடத்தியபின் இறுதி செய்யப்பட்டது. அனைத்து  மாநிலங்களும் இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொண் டன. அதைத் தொடர்ந்து மாநிலங்களுடன் விரிவான விவாதம் 43ஆவது கவுன்சில் கூட்டத்தில் நடத்தப்பட்டது. அதில் ஒன்றிய அரசு சந்தை மூலம் நடப்பு ஆண்டில் ரூ. 1.59 லட்சம் கோடி கடன் வாங்கி அதை மாநிலங்களுக்கும், யூனி யன்பிரதேசங்களுக்கும் அனுப்புவது என்று முடிவு செய் யப்பட்டன. இந்த முடிவின் பிறகு ரூ. 75,000 கோடி 15.7.2021 அன்று மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டது.

அதற்கு மேலும் இருக்கும் பணத்தின் அடிப்படையில் வழக்கமாக ஆண்டுதோறும் அளிக்கப்படும் இழப்பீட்டு நிதியையும் ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பை சரி செய்யும் வகையில் வழங்கி வந்தது.

மாநிலங்கள் முழுமை யான இழப்பீட்டு நிதியை 2017 ஜி.எஸ்.டி. (மாநிலங்களுக்கு இழப் பீடு) சட்டப்படி இழப்பீட்டு

வரி விதிக்கப்படும் 5ஆண்டுகளுக் குள் ஜி.எஸ்.டி. வசூல் வீழ்ச்சியால் கடன் வாங்கப்பட்ட கடனை

யும் செலுத்த இழப்பீட்டு வரி 5 ஆண்டுகளுக்குப்பிறகும்

நீட்டிக்கப்பட்டு சரிசெய்யப் படும்.

இவ்வாறு ஒன்றிய நிதித்துறை இணைய மைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்தார். பதிலுடன் இணைத்து வெளியிட்ட மாநில வாரியாக வழங்கப் படும் இழப்பீட்டு நிதிப் பட்டி யலின்படி தமிழ்நாட்டுக்கு 25,519  கோடி ரூபாய்  வழங்கப்பட் டுள்ளது. 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை இன்னும் வழங் கப்பட வேண்டிய இழப் பீட்டுத் தொகை ரூ. 6,155 கோடி என்றும், 2021 ஏப்ரல் - மே மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப் பீட்டுத் தொகை ரூ.3,574 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment