நாட்டில் 15 கோடி குழந்தைகள், இளைஞர்கள் அடிப்படை கல்வியற்றவர்களாக இருக்கிறார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 14, 2021

நாட்டில் 15 கோடி குழந்தைகள், இளைஞர்கள் அடிப்படை கல்வியற்றவர்களாக இருக்கிறார்கள்

ஒன்றிய கல்வி அமைச்சர் தகவல்

புதுடில்லி,ஆக.14- இந்தியாவில் 15 கோடி பேருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு உருவாக்கமும் தொழில் முனைவும் என்றதலைப்பில் டில்லியில் கருத்தரங்கு நடந்தது.

இதில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

குழந்தைகள் மற்றும் இளைஞர்களில் 3 வயது முதல் 22 வயதுள்ளவர்களில் அரசு, தனியார் துறை, தொண்டு நிறுவனப் பள்ளிகள், அங்கன்வாடி, உயர்கல்வி நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக 35 கோடி பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த வயதுள்ளவர்கள் நாட்டில் 50 கோடி பேர் உள்ளனர்.

இந்தக் கணக்கின்படி ஏறக்குறைய 15 கோடி குழந்தைகள், இளைஞர்கள் அடிப் படை கல்வியற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களை கல்வி முறைக்குள் கொண்டு வருவது அவசியமாகும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், மக்கள்தொகையில் 20 விழுக் காடு பேர் அதாவது, ஏறக்குறைய 25 கோடி மக்கள் கல்வியறிவு பெறாதவர்களாக உள்ளனர். ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை என்பது வெறும் ஆவணம் அல்ல. நாட்டின் 100-ஆவது சுதந்திர தினத் துக்குள் நாம் திட்டமிட்ட இலக்குகளை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment