புறஊதா கதிர்கள் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

புறஊதா கதிர்கள் கரோனா பரவலை கட்டுப்படுத்தும்

புறஊதா கதிர்களை வெளியிடும் விளக் குகள் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அது பற்றிய புதிய ஆய்வு முடிவு ஒன்றும் வெளியாகியுள்ளது. "நேஷனல் அகடமி ஆப் சயின்சஸ்" என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், “புள்ளி விவரங்களின் அடிப்படையில் மட்டும் வைத்துப் பார்க்கும்போது உலக அளவில் கரோனா பரவல் அதிகரிப்பதற்கும் தொடர் பிருக்கிறது. அதாவது, கோடைக்காலத்தில் வைரஸ் பரவல் குறைவதும்  மழை மற்றும் குளிர்காலத்தில் வைரஸ் பரவல் அதிகரிப் பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வில்,

புறஊதா கதிர் ஆய்வு  கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் என்று கண்டறி யப்பட்டுள்ளதுஎன்று தெரிய வந்துள்ளது. 

யு.வி. லைட் எனப்படும் புற ஊதா கதிர் விளக்குகள் புதிய தொழில்நுட்பம் கிடை யாது.  காலம் காலமாக நடைமுறையில் உள்ள தொழில்நுட்பம்தான். இவை கரோனா  வைரஸை மட்டுமல்ல, அனைத்து வகை யான வைரஸ், பக்டீரியா கிருமிகளைக் கொல்லும் தன்மை உள்ளது நிரூபிக்கப் பட்டுள்ளது.

 ஆனால், இதில் முக்கியமான தகவல் யு.வி. கதிர்கள் மனிதர்கள் மேல் நேரடியாகப் படக்கூடாது. காரணம், யு.வி. கதிர்கள் மனிதர்கள் மேல் நேரடியாகப்படும்போது தோல் புற்றுநோய், கண்புரை போன்ற பிரச் சினைகளை ஏற்படுத்தும். அதனால்தான் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுவதால் யு.வி.கதிர்கள் மனிதர்களைத் தாக்கி இது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறது. கண்புரை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் கண் களுக்கான குளிர்கண்ணாடிகளிலும் யு.வி. பாதுகாப்புக்கான கோட்டிங் கொடுக்கப்படு கிறது.

மனிதர்கள் மீது நேரடியாகப்படுவது தான் ஆபத்து என்பதால் நாம் பயன் படுத்தும் அலைபேசிகள், மடிக்கணினி, பர்ஸ் போன்ற பொருள்களில் கிருமி நீக்கம் செய்வதற்கு இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, ஆட்கள் இல்லாத ஓர் அறையை யு.வி. லைட்டு களைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்து விட்டு, அதன் இயக்கத்தை நிறுத்திவிட்ட பின்னர் அந்த அறையைப் பயன்படுத் தலாம்.

அந்த அறைக்குள் யு.வி. கதிர்கள் தொழில் நுட்பத்தை இயக்குபவர்கூட இருக்கக் கூடாது. அறைக்கு வெளியிலிருந்துதான் அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது, எந்தக் காரணம் கொண்டும் யு.வி. கதிர்கள் மனிதர்கள் மேல் படக்கூடாது.

No comments:

Post a Comment