துணை நகரங்கள் உருவாக்கப்படும் அமைச்சர் சு.முத்துசாமி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 22, 2021

துணை நகரங்கள் உருவாக்கப்படும் அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

கோவை, ஜூலை 22 கோவையில் 19.7.2021 அன்று தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் உடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

முதலமைச்சரின் உத்தரவின்படி அனைத்து துறைகளிலும் அமைச் சர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வரு கின்றனர்.

ஒவ்வொரு துறையிலும் என் னென்ன பணிகள் நடைபெறுகிறது, இனி ஏதாவது மாற்றம் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை நடை பெறுகிறது. கோவை, மதுரை, சென்னை, திருச்சி, சேலம் போன்ற பகுதிகளில் துணை நகரங்கள் உரு வாக்கும் பணி தொடங்குகிறது.

துணை நகரங்கள் முன்னு தாரணமாக இருக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம். இதை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அது ஒரு மாடல் நகரமாக உருவாக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படும்.

பெருந்துறை, திருச்செங்கோடு, நாமக்கல் பகுதி மக்களுக்கு பயனுள்ள தாக இருக்கும் வகையில் ஆட்டோ நகரங்களை உருவாக்கவும் ஏற்பாடுநடைபெறுகிறது

என்றார்.

வீட்டு வசதி வாரியத்தால் கட்டப் பட்ட பழுதடைந்த கட்டடங்களை பராமரிக்க வேண்டும் என்ற கோரிக் கையை ஆய்வு செய்வதாகவும், மாற்று இடங்களில் கட்டடங்கள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது எனவும் வீடுகள் ஒதுக்கப் பட்டு பத்திர பதிவு செய்யாமல் டாக்குமெண்ட் கொடுக்கப்படாமல் இருப்பவர்களுக்கு விரைவில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படு மெனவும், வீட்டு வசதி வாரியத்தின் கட்டுமான பணிகளில் சட்டத் துக்குப் புறம்பாக எதுவும் இருக்கக் கூடாது என்பதில் முதல்வர் உறுதி யாக இருக்கிறார் என தெரிவித்த அவர் கட்டடங்கள்,லே-அவுட் எது வும் சட்டத்திற்கு புறம்பாக  இருக்க கூடாது எனவும் சட்ட விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டபட்டு உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு குலுக்கல் முறையில் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும். தவறுகள் நடந்து இருந்தால் நிச்சயம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஏற்கெனவே கோவை மாஸ்டர் பிளான் 1211 சதுர கிலோ மீட்டராக உள்ள நிலையில் கூடுதலாக ஆயி ரத்து 658 சதுர கிலோ மீட்டர்கள் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப் படும் உள்ளது.  புதிய மாஸ்டர் பிளான் ஒன்றரை ஆண்டுகளில் வெளியிடப்படும்.

அதேபோல சிங்காநல்லூர் அடுக்கு மாடி குடியிருப்புவாசிகள் நல சங்கத் தினருடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்ட நடவடிக்கைகள் எடுக்கபடும். எனவும் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment