இந்தியாவிற்கு முதல் பதக்கம் - ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற மணிப்பூர் மங்கை மீராபாய் சானு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 24, 2021

இந்தியாவிற்கு முதல் பதக்கம் - ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற மணிப்பூர் மங்கை மீராபாய் சானு

டோக்கியோ, ஜூலை 24 ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடந்துகொண்டு இருக்கும்  ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் 26 வயதான சாய்கோம் மீராபாய் சானு 49 கிலோ எடைப் பிரிவில் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது

இரும்பு பெண்மணி இரோம் சர்மிளாவின் சொந்த மாநிலமான மணிப்பூர் மாநிலத்தின்  இம்பால் நகரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நோங்பாக் காக்சிங் தான் (Nongpok Kakching) மீராபாய் சானு பிறந்து, வளர்ந்த கிராமம். நிரந்தர வேலை இல்லாமல் கிடைக்கின்ற வேலையை செய்து வந்துள்ளனர் அவரது பெற் றோர். அதே கிராமத்தில் இயங்கி வந்த பள்ளியில் ஆரம்ப கல்வியை படித்துள்ளார் சானு.

 வட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டி களில் தனது முத்திரையை பதித்த அவர் 2013இல் ஜுனியர் பிரிவில் நாட்டின் சிறந்த வெயிட் லிப்ட்டர் என்ற பட்டத்தை வென்றார்.

பட்டியாலாவில் உள்ள விளை யாட்டு பயிற்சி மய்யத்தில் அவருக்கு குஞ்சரணி தேவி பயிற்சியாளரானர். அதன் மூலம் தேசிய போட்டிகளில் அசத்தி 2014 இல் நடந்த காமன் வெல்த் போட்டிகளில் பங்குபெற வாய்ப்பு பெற்றார். அதில் இரண் டாம் இடம் பிடித்து வெள்ளி வென் றிருந்தார் மீராபாய். அந்த வெற்றி யின் மூலமாக 2016இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார். ஆனால் அதில் 48 கிலோ எடைப்பிரிவில் ஆறாவது இடம் பிடித்தார்.  அமெ ரிக்காவில் நடந்த 2017 -_ உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி யில் 48 கிலோ எடைப்பிரிவில் 194 கிலோவை   தூக்கி நிறுத்தி தங்கத்தை வென்றார் மீராபாய்.

2020இல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் 49 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென் றார்.  இதனை அடுத்து 2021 ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா விற்கு முதல் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுத்தந்துள்ளார்.   இவரும் வறிய குடும்பச்சூழலில் வளர்ந்து இந்தியாவிற்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வாங்கித்தரும் அளவிற்கு உழைத்துள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment