உ.பி. மாநில ஆதித்யநாத் அரசின் அராஜகம் விருப்பு - வெறுப்போடு பாடத் திட்டங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 23, 2021

உ.பி. மாநில ஆதித்யநாத் அரசின் அராஜகம் விருப்பு - வெறுப்போடு பாடத் திட்டங்கள்!

லக்னோ, ஜூலை 23- உத்தரப்பிரதேச கல்வி வாரியம் நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை மாற்றி உள்ளது. என்சிஇஆர்டி முறைப்படி ஆங்கில மொழிப் பாடத் திட்டங்களை முழுமையாகவே மாற்றியுள்ளது. மேலும், மாற்றப்பட்ட பாடத்திட்டங்கள் 2021-2022 கல்வியாண்டு முதலே அமலாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச கல்வி வாரியம் மாற்றியமைத்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடத் திட்டத்தில், ரவீந்திரநாத் தாகூர், குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கவிதாயினி சரோஜினி நாயுடு, ஆர்.கே. நாராயணன், நாவலாசிரியர் முல்க் ராஜ் ஆனந்த் உள்ளிட்டோரின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தாகூர் எழுதியதி ஹோம் இஸ் கமிங்' என்னும் கதையும், டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய பெண் கல்வி தொடர்பானதி விமன்'ஸ் எஜுகேஷன்' என்னும் கட்டுரையும் நீக்கப்பட்டுள்ளன.

இவற்றைத் தவிர, 12 ஆம் வகுப்பு பாடங்களில் எல். பாஷாம் எழுதியதி ஹெரி டேஜ் ஆப் இந்தியா', முல்க் ராஜ் ஆனந்த் எழுதியதி லாஸ்ட் சைல்ட்', ஆர்.கே. நாராயணன் எழுதியஅன் ஆஸ்டிராலஜர் டே' ஆகிய கதைகளும் நீக்கப்பட்டுள்ளன. மேலும் உலகப் புகழ்பெற்ற ஆங்கில கவிஞர்களான ஜான் மில்டன் மற்றும் ஷெல்லியின் கவிதைகளும் அகற்றப்பட்டுள்ளன.

10 ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தில் சரோஜினி நாயுடுவின் கவிதையானதி வில்லேஜ் சாங்' நீக்கப்பட்டுள்ளது. ராஜகோபாலாச்சாரி, ரேபர்ன், ஆர். சீனிவாசன் ஆகியோரின் படைப்புக்களும் நீக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment