முதலமைச்சர் பொது நிவாரண நிதி இணையதளம் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 10, 2021

முதலமைச்சர் பொது நிவாரண நிதி இணையதளம் அறிமுகம்

சென்னை, ஜூலை 10- தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறைஅமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் நேற்று (9.7.2021) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு <https://cmprf.tn.gov.in/> என்றபுதிய இணையதளத்தினை துவக்கி வைத்தார் கள்.

கோவிட்-19 இரண்டாம் அலைப் பெருந்தொற்று காலத்தில் மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், சுகாதார உட்கட்டமைப்பின் மீது ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங் குமாறு தமிழ்நாடு மக்களிடம் கடந்த 11.05.2021 அன்று தமிழ்நாடு முதல மைச்சர் தனிப்பட்ட முறையில் வேண்டு கோள் விடுத்தார்.

நன்கொடையாளர்கள் எளிதில் அணுகத் தக்க வகையில் தமிழ்நாடு மின் ஆளுமைமுகமையின் சேவையினை பயன்படுத்தி எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகமான பரிமாற்றங்களைக் கையாளும் வகையில் புதிய இணைய தளம் ஒன்றினை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

இத்தளத்தின் வாயிலாக இணைய வங்கி,உள்நாட்டு பற்று மற்றும் கடன் அட்டைகள் மற்றும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) ஆகியவற்றைப் பயன்படுத்தி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாளர்கள் தாராளமாகத் தங்களது பங்களிப்பினை வழங்க இயலும்.

இதே முறைகளை பயன்படுத்தி நிறுவனங்கள், தனிநபர் குழு மற்றும் பல்வேறு சங்கங்கள்தங்களது பங்களிப் பினை வழங்கலாம். நிறுவனங்கள் தமிழ் நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அளிக்கும் பேரிடர் சமூக பொறுப்பு நிதி பங்களிப்புகளையும் இவ்விணையதளம் மூலமாக வழங் கலாம். இத்தளத்தின் வாயிலாக வழங் கப்படும் நன்கொடைகளுக்கான ஒப் புகைச் சீட்டுகளை இத்தளத்திலேயே பெற இயலும். இவ்விணைய வழியாக நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் பங்களிப்பு விவரங்கள் நாள்தோறும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் பங்களிப்புகள் வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 80 (G)-ன் கீழ் 100 விழுக்காடு விலக்குபெற தகுதியுடையவை.

பொதுமக்களும் நன்கொடையாளர் களும் <https://cmprf.tn.gov.in/> என்ற இணையதளத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பங்களிப்பை வழங்கலாம்.

இந்நிகழ்ச்சியில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன்  தகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நீரஜ்மிட்டல் மற்றும் அரசு உயர் அலுவலர் கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment