நீரிழிவு நோய் தடுப்புக்கான விரிவானஆய்வுகள் அவசியம் ஒன்றிய அமைச்சர் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 22, 2021

நீரிழிவு நோய் தடுப்புக்கான விரிவானஆய்வுகள் அவசியம் ஒன்றிய அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 22- நாட்டில் நீரிழிவு நோய் குறித்த அர்த்தமுள்ள மற் றும் எதிர்கால ஆராய்ச் சியின் அவசியத்தை  ஒன் றிய அறிவியல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், வலியுறுத் தியுள்ளார்.

சென்னை கோபால புரத்தில் உள்ள டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மய்யம் நடத்திய நிகழ் வில் 60 ஆண்டுகளுக்கும்

மேலாக டைப் -1 நீரிழிவு நோயுடன் வெற்றி கரமாக வாழ்ந்து வரும் நபர்கள் பாராட்டப்பட் டனர். இந்த விழாவில் விழாவில் உரையாற்றிய ஒன்றிய அமைச்சர்  ஜிதேந் திர சிங் புகழ்பெற்ற மருத் துவர்கள் குழுவால் இது போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு  முழு ஆதரவு வழங் கும் என்றார்.

நீரிழிவு நோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச் சையில்  சென்னையை சேர்ந்த டாக்டர் மோகன் உள்ளிட்டோர் அளித்து வரும் முக்கிய பங்களிப்பை ஒன்றிய அமைச்சர் எடுத் துரைத்தார். வட இந்தி யாவில் இந்த துறையில் அதிகளவில் ஆராய்ச்சி கள் மேற் கொள்ளப்பட வில்லை என்றார்.

இன்சுலின் முக்கியத்துவம்

இன்சுலின் கண்டு பிடிக்கப்பட்ட நூற்றாண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது என்ற அவர் இன்சுலின் இல்லாமல் டைப் -1 நீரிழிவு நோயா ளிகள் உயிர்வாழ்வது சாத் தியமில்லை என்றார்.

விருதுகளின் முதல் பதிப்பை அறிமுகப் படுத்தி பேசிய  டாக்டர் மோகன், டைப் -1 நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் காரணமாக பல ஆண்டு கள் ஆரோக்கியமாக வாழத் தொடங்கியுள்ளனர்.

"எனவே, 100 ஆண்டு கால இன்சுலின் கண்டு பிடிப்புக்கு உரிய மரி யாதை செலுத்தும்வகை யில்  60 ஆண்டுகளுக்கும் மேலாக டைப் -1 நீரிழிவு நோயால் ஆரோக்கிய மாக வாழ்ந்த  நபர்களை அடையாளம் காணவும்,  அவர்களின் உணவுக்கட் டுப்பாடு மற்றும் நோயை கட்டுப்படுத்தவேண்டும் என்ற  விடாமுயற்சி கார ணமாக அவர்களுக்கு வெகுமதி அளிக்கவும் முடிவு செய்துள்ளோம் என டாக்டர் மோகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment