செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 15, 2021

செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு

நலவாழ்வு துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜூலை 15 செங்கல்பட்டு வளாகத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க, பாரத் பயோடெக் நிறுவனத் துக்கு அனுமதியளிக்க அதிக வாய்ப்புஉள்ளதாக தமிழக நலவாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ள நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் கரேனா தடுப்பூசி உற்பத்தியை ஒன்றிய அரசு தொடங்க வேண்டும். இல்லையென்றால் தடுப்பூசி தயாரிப்பதற்கான அனுமதியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், தனியார் பங்களிப்புடன் தடுப்பூசி தயாரிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக நலவாழ்வு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விரைவில் டில்லி செல்லும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தமிழகத்துக்கு கூடு தலாக தடுப்பூசி, 11 மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக் கான அனுமதி, செங்கல்பட்டு தடுப்பூசி மய்யத்தில் கரேனா தடுப்பூசி உற்பத்தி, கரோனா தொற்று தடுப்பு பணிகள் உள் ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளனர். செங்கல்பட்டு தடுப்பூசி மய்யத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியை மேற்கொள்ள கோவாக்சின் தயாரிக்கும் பாரத் பயோடெக் உட்பட 3 நிறுவனங்கள் தயாராகஇருப்பதாக ஒன்றிய நலவாழ்வுதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க அதிக வாய்ப்புள்ளது என்றனர்.

ஊரடங்கில் அறிவியல் பாடங்களை செய்முறையாக்கி  12 வயது அரசுப் பள்ளி மாணவர் சாதனை

மாவட்டக் கல்வி அலுவலர் பாராட்டு

புதுக்கோட்டை, ஜூலை 15 கரோனா ஊரடங்கு சமயத்தில் பாடப்புத்தகத்தில் உள்ள அறிவியல் பாடங் களைச் செய்முறையாக்கி வரும் 7ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவரை அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் ஊராட்சி ஜீவாநகரைச் சேர்ந்த வைரவன், பிரியங்கா தம்பதியரின் மகன் ரித்தீஸ் (12). கீழாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்புப் படித்து வரும் இவர், மண்களைக் கொண்டு கழிவு நீரைக் குடிநீராக்குதல், காற்றாடி இறக்கை மூலம் காற்றாலை மின்சாரம் தயாரித்தல், வாழை மரம் மற்றும் உருளைக் கிழங்கில் இருந்து மின்சாரம் தயாரித்தல் போன்ற அறிவியல் பாடக் கண்டுபிடிப்புகளை பழைய பொருட்களைக் கொண்டு செய்முறையாக்கி வருகிறார். மேலும், செல்பேசிக்கு நெட்வொர்க் கவரேஜை அதிகப்படுத்துதல், சிறிய மோட்டார் மூலம் சிலந்தி ரோபோ, பம்புசெட் போன்றவற்றையும் இயக்கி வருகிறார்.

ஊரடங்கு சமயத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் பெரும்பாலான மாணவர்கள் செல்பேசி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் பொழுதைக் கழித்து வரும் சூழலில், பாடம் தொடர்பான அறிவியல் கண்டு பிடிப்புகளைச் செய்முறையாக்கி வரும் மாணவர் ரித்தீஸை, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம் பள்ளிக்கு வரவழைத்துப் பாராட்டினார்.

 

No comments:

Post a Comment