ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 11, 2021

ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சிவகங்கை, ஜூலை 11 ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சிவகங்கை அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவ மனையில் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அமைச் சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் 9.7.2021 அன்று ஆய்வு செய்தனர். அங்கு கர்ப் பிணிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அதன் பின்னர் அமைச் சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 10 ஆயிரத்து 839 ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் துணை சுகாதார நிலை யங்கள் உள்ளன.. இவற்றில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற 15ஆவது நிதிக்குழு மூலம் ரூ.4 ஆயிரத்து 679 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 20 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு நோய்களுக்குரிய மருந்து இருப்பு உள்ளது. இன்னும் 6 மாதத்தில் ஒரு கோடி பேருக்கு தேவையான அளவு மருந்து தயார் நிலையில் வைக்கப்படும்.

ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதனால் பாதிக் கப்பட்ட கர்ப்பிணி தற் போது குணமடைந் துள்ளார்.  வைரஸ்கள் பல் வேறு வடிவில் வரும் நிலையில் அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

புற்று நோய் சிகிச்சைக் கென பிரத்தியேக சிகிச்சை மய்யங்களை மாவட்டந் தோறும் தொடங்க உள் ளோம் அதேபோல் அறி ஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மய்யத்தை பிரமாண்டமாக விரிவு படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment