கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு நிதியுதவி : தமிழ்நாடு முதலமைச்சருக்கு அய்ரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பு, பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் நன்றி தெரிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 10, 2021

கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு நிதியுதவி : தமிழ்நாடு முதலமைச்சருக்கு அய்ரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பு, பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் நன்றி தெரிவிப்பு

சென்னை, ஜூலை 10- ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தொடர்ந்து, தொய்வின்றி இயங்க ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தமைக்காக தமிழ் நாடு முதலமைச்சர்மு..ஸ்டாலின் அவர்களுக்கு ஜெர்மனியில் உள்ள அய்ரோப்பா தமிழர்கள் கூட்ட மைப்பு, ஓய்வுபெற்ற மூத்த தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை 58 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது.  அங்குப் பணி புரிந்த தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக்க நிக்லஸ் அவர்கள் செப்டம்பர் 2020இல் ஓய்வு பெற்றபின், நிதிப் பற்றாக்குறையால் தமிழ்ப் பிரிவை மூடுவதாக அப்பல்கலைக்கழக நிர் வாகம் அறிவித்தது.

கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்குத் தேவையான நிதியில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாயை, 2019இல் முந்தைய ஆட்சி யாளர்கள் தமிழ்நாடு அரசின் சார் பில் அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதனை உடனடியாக அளித்து அப்பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டுமென, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். 

எனினும், தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட அத்தொகை விடு விக்கப்படாததை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர், கொலோன் பல் கலைக்கழகத் தமிழ்த்துறை தொடர்ந்து, தொய்வின்றி, இயங்கிட தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாயை உடனடியாக கொலோன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைக்கு வழங்கிட உத்தரவிட்டார். 

ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டு,   தேமதுரத் தமி ழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தமைக்கு அய்ரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்களுக்குத் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், அர்ப் பணிப்புடனும், விடாமுயற்சியுட னும் செயல்பட்டுத் தமிழுக்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் அளிப்பதோடு, தமிழ்மொழியின் தொடர் பயன்பாட்டிற்கும், முன் னேற்றத்துக்கும் வலுச்சேர்த்துப் பல பன்னாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இடம்பெறும் வண்ணம் இந்த நிதியுதவி அமைந்துள்ளது என்றும் தங்களது கடிதத்தில் தெரிவித்துள் ளார்கள்.

கொலோன் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற மூத்த தமிழ்ப் பேரா சிரியர் உல்ரிக்க நிக்லஸ் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கு எழுதிய கடிதத்தில், தமி ழுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக் கும் தங்களின் ஆட்சி குறுகிய காலத்திலேயே இதனைப் பரிசீலித்துத் தக்க சமயத்தில் நிதியுதவி அளித்தமைக்குத் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment