அய்ந்து மண்டலங்களை உள்ளடக்கி நடந்த மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

அய்ந்து மண்டலங்களை உள்ளடக்கி நடந்த மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு!

 ஆர்வத்தோடு மகளிர் பங்கேற்றனர்

தஞ்சை, ஜூலை 29- கழக மகளிரணித் தோழியர்கள் உற்சாகத்தோடு பங்கேற்று - தொடர் நிகழ்ச்சியாக காணொலியில் நடைபெற்றுவரும் மகளிர் பெரி யாரியல் பயிற்சி வகுப்புகள் பற்றிய விவரம் வருமாறு:

தந்தை பெரியார்

ஓர் அறிமுகம்

கோவை, ஈரோடு, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மண்டலங்களை உள்ளடக்கிய பிரிவு - 4இல் அய்ந்தாம்  நாள்(23.07.2021) பயிற்சி வகுப்பு மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது.

வகுப்பினை பயிற்சி மாணவி சிறீதேவி பொன்மொழிகள் கூறி தொடங்கி வைத்தார்.வகுப் பாசிரியர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை பற்றிய ஒரு தெளி வான அறிமுகவுரையை சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில துணை அமைப்பாளர் .தில்ரேஷ் வழங்கினார். “தந்தை பெரியார் ஓர் அறிமுகம்என்ற தலைப்பில் யார் பெரியார் என்று தொடங்கி பெரியாரின் தனித்துவம்,பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணி, பெண் விடுதலைக் களம், சுயமரியாதை திருமண முறை, பெரியாரால் வந்த சட்டங்கள், பெரியாரின் பேச்சு,எழுத்து என்று தந்தை பெரியார் பற்றிய விளக்கமான,ஆழமான செய்திகளை எளிமையாக பயிற்சி பெறும் மகளிர்க்கு புரியும்படி வகுப்பாசிரியர் கவிஞர் அவர்கள் எடுத்துரைத்தார். மகளிர் கேள்விகளை அடுக்கடுக்காக கேட்கத் தொடங்கினர்.அனைவரின் அய்யமும் வகுப்பாசி ரியரின் பதில்கள் மூலம் தெளிவடைந்தது.வகுப்பில் பயிற்சி மாணவி பழனி ரேவதி பெரியார் பற்றிய கவிதை ஒன்றை வாசித்து தனது தனித்திறனை வெளிப்படுத்தினார். முந்தைய நாள் வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவி சிறீதேவி சரியான பதில் கூறி பரிசு பெற்றார்.வகுப்பின் இறுதி யில் தஞ்சை ஜெ.ஜெ.கவின் நன்றியுரை கூறினார். அய்ந்தாம் நாள் வகுப்பினை மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி ஒருங்கி ணைத்தார்.

தமிழர் தலைவரின்

தனித் தன்மைகள்

தஞ்சை, கோவை, ஈரோடு, சிவகங்கை, திண் டுக்கல் ஆகிய 5 மண்டலங்களை உள்ளடக்கிய பிரிவு - 4இல் ஆறாம் நாள் (24.07.2021) பயிற்சி வகுப்பு மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கியது.

வகுப்பில் பயிற்சி மாணவி சிவகங்கை புனிதா பெரியாரின் பொன்மொழிகளை கூறி வகுப்பை தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து நீல மலை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் .அருணா வகுப்பின் தலைப்பு குறித்தும், வகுப்பாசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் பற்றியும் அறிமுகவுரை நிகழ்த்தினார்.குறித்த நேரத்தில் வகுப்பு தொடங்கியது.பேராசிரியர் நம்.சீனிவாசன்தமிழர் தலைவரின் தனித்தன்மைகள்என்ற தலைப்பில் ஆசிரியரின் வாழ்வியலை அவரின் பத்து வயது தொடங்கி ஆண்டு வாரியாக அடுக் கடுக்காக சொன்னார்.ஆசிரியரின் படிப்பு,அவரின் ஆற்றல், திறமை, மற்றவரிடம் பழகும் பாங்கு,அவர் பெற்ற விருதுகள்,88 ஆண்டில் 78 ஆண்டுகால பொது வாழ்க்கை என்று அனைத்து தகவல் களையும் அனைத்து மகளிரும் புரிந்து கொண்டு, குறிப்பு எடுக்கும் வகையில் எடுத்துரைத்தார். முந்தைய நாள் எடுக்கப்பட்ட பாடத்தில் இருந்து கேள்வி கேட்கப்பட்டு ,அதற்கு சரியான விடையை பயிற்சி மாணவி பொ.பரமேஸ்வரி அளித்து பரிசுத் தொகையை பெற்றார். நிகழ்வின் இறுதியில் தோழர் ராதா மூன்று நிமிடத்தில் தந்தை பெரியார் பற்றி பேசி தன் தனித்திறனை வெளிப்படுத்தினார்.இறுதியில் பயிற்சி மாணவி அன்பரசி நன்றியுரை கூறினார். வகுப்பை மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி ஒருங்கிணைத் தார்.

நீதிக்கட்சி சுயமரியாதை இயக்க வரலாறு

தஞ்சை, கோவை, ஈரோடு, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மண்டலங்களை உள்ளடக் கிய பிரிவு - 4இல் ஏழாம் நாள் (26.07.2021) பயிற்சி வகுப்பு மிகுந்த வரவேற்புடன் தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் இடைவெளிக்குப் பின் மகளிர் இணைவது சிரமம் என்ற எண்ணத்தை பொய்ப்பித்து மகளிர் தோழர்கள் அதே உற் சாகத்துடன் பங்கேற்றனர்.அய்யாவின் பொன் மொழிகள் கூறி சிவகங்கை மாணவி நந்தினி வகுப்பை தொடங்கி வைத்தார்.வகுப்புப் பற்றியும், வகுப்பு ஆசிரியர் கழகத்தின் செயலவைத் தலைவர் அறிவுக்கரசு பற்றியும், பயிற்சி மாணவி சிவகங்கை சரண்யா அறிமுகவுரை நிகழ்த் தினார்.”நீதிக்கட்சி-சுயமரியாதை இயக்க வரலாறுஎன்ற தலைப்பில் வகுப்பாசிரியர், திராவிடர் இயக்க வரலாற்றின் தொடக்கம் தொடங்கி நீதிக்கட்சியின் தோற்றம்,அதன் செயல்திட்டம், இயற்றிய சட்டங்கள், பெரியாரின் சுயமரியாதை இயக்கம், இயக்கத்தின் பணிகள்,மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம்,சுயமரியாதை இயக்கத்தால் அடைந்த மாற்றம்,திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது என்று ஒரு நூற்றாண்டு வரலாற்று செய்தியை, கொடுத்த நேரத்தில் மகளிர் அனைவருக்கும் தெளிவாக புரியும்படி எடுத்து ரைத்தார்.முந்தைய நாள் நடந்த பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விக்கு பயிற்சி மாணவி வீரசக்தி சரியான விடையளித்து பரிசுத்தொகையினை பெற்றார்.நிகழ்வில் பயிற்சி மாணவி மாரியம்மாள் மூன்று நிமிடத்தில் பெரியார் பற்றிய கவிதை ஒன்றினை வாசித்து தனது தனித்திறனை வெளிப்படுத்தினார்.இறுதியில் நீலமலை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அருணா நன்றியுரை கூறினார்.

வகுப்பை மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி இணைப்புரை வழங்கி ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment