அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

சென்னை, ஜூலை 27- சென்னை யில் அமெரிக்க தூதரக அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கியூபா வுக்கு ஆதரவாக 29.7.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ள தாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து நேற்று (26.7.2021) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கியூபாப் புரட்சியை சீர்குலைக்கும் வகையில் அமெரிக்க வல்லரசு தொடர்ந்து சீரழிவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அய்.நா. பொதுமன்றம் கியூபா மீதான தடையை நீக்க வேண்டுமென பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் தடையை நீக்க மறுக்கும் அமெரிக்கா குழப்பத்தை ஏற்படுத்தி கியூப அரசை கவிழ்க்க முயல்கிறது. இதை எதிர்த்து ஒன்றுபட்டு போராடி வரும் கியூபா மக் களுக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஏகாதிபத்திய அர சினை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஅய் (எம்-எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் 29.7.2021 அன்று சென்னையில், அமெரிக்க தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது வழக்கு: மதுரை மாநகராட்சி முடிவு

மதுரை, ஜூலை 27 வைகை ஆற்றில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் காவல்துறையில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘’வைகை ஆற்றில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது இனி மாநகராட்சி கருணை காட்டப்போவதில்லை. வெறும் எச்சரிக்கை, அபராதம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. வைகை ஆற்றில் எந்த இடத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினாலும் அதன் பேட்ச் நம்பர், முகவரியைக் கண்டறிந்து எந்த நிறுவனம், எந்த மருத்துவமனைக்கும், மெடிக்கல் ஸ்டோருக்கு அந்த மருந்துகளை விற்பனை செய்தது என்பதைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபர்கள், நிறுவனம் மீது காவல்துறையில் புகார் செய்து கடும் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வைகை ஆற்றைப் பாதுகாப்பதை மாநகராட்சி மட்டுமே மனது வைத்தால் முடியாது. மக்கள், பொறுப்புடன் செயல்பட வேண்டும். அவர்கள் தாங்கள் மட்டும் குப்பை கொட்டாமல் இருப்பதோடு, மற்றவர்களையும் அவர்கள் தடுக்க முன் வர வேண்டும். வைகை ஆற்றின் பாதுகாப்பை மாநகராட்சி மக்கள் இயக்கமாக மாற்ற முடிவெடுத்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

கொற்கை அகழாய்வில் வடிகட்டும்

ஒன்பது அடுக்கு குழாய் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி, ஜூலை 27-  பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் சிறீவை குண்டம் அருகே ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசின் சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

கொற்கையில் 17 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு பழங்காலத்தில் சங்கு அறுக்கும் தொழிற்சாலை இருந்ததும், 10 அடுக்கு செங்கல் கட்டுமானம் இருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கொற்கை அகழாய்வில், ஒரு குழியில் திரவப் பொருட்கள் வடிகட்டும் குழாய் பல அடுக்குகளாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 9 அடுக்குகளாக கண்டறியப்பட்ட இந்த குழாய் முழுவதையும் அகழ்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றொரு குழியில் முழுமையான மண்பானை யும், அதன் அருகில் 3 சங்குகளும், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் டெங்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது

சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

சென்னை, ஜூலை 27- தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக் கையால் டெங்கு நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றததில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அறிக்கை தாக்கல் செய்த தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறை செயலாளர் ராதாகிருஷ் ணன், டெங்கு பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், டெங்கு மற்றும் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் 2,715 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி யிருந்தார். மேலும், டெங்கு பாதிப்பு பெருமளவு குறைந்து உள்ளதாகவும் புகை போடுதல், கொசு ஒழிப்புக்கு மருந்து தெளிப்பு உள்ளிட்ட நோய்த் தடுப்புப் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதே போல் சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மொத்தம் 52 பேர் மட்டுமே டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை நான்கு வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment