ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி

மாஸ்கோ, ஜூலை 21- ஒலியை விட 9 மடங்கு வேகமாக சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் சிர்கான் என்ற அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுக ணையை ரஷ்யா வெற்றி கரமாக பரிசோதித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் உடனான மோதலை எதிர்கொள்ள ரஷ்யா கடந்த சில வருடங்களாக ஹைபர்சோனிக் ஆயுதங் களைதயாரிப்பதில் முனைப்பு காட்டி வரு கிறது. அந்த வகையில் இலக்கை துல்லியமாக தாக்கும் சிர்கான் எனப் படும் ஹைபர்சோனிக் ஏவுகணையை வெற்றிகர மாக பரிசோதித்துள்ள தாக ரஷ்யா தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்நாட் டின் பாதுகாப்பு அமைச் சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரஷ்ய ஆர்டிக்கில்லில் உள்ள வெண் கடலில் நிலை நிறுத்தப்பட்ட அட்மிரல் கோர்ஸ் கோ கப்பலில் இருந்து ஏவப்பட்ட சிர் கான் ஏவுகணை 350 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை துல்லி யமாக தாக்கியதாக தெரிவித்துள்ளது. சிர்கான் ஏவுகணையானது ஆயி ரம் கிலோ மீட்டர் வரையிலான இலக்கை துல்லிய மாக தாக்கும் திறன் கொண்டதாகும்.

இதற்கு முன்னர் கடந்த அக்டோபர் மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பிறந்தநாளில் சிர்கான் ஏவுகணை பரி சோதனை செய்யப்பட் டது. ரஷ்யாவில் ராணு வத்தை பலப்படுத்த ஹைபர் சோனிக் ஏவுகணை முக் கிய பங்காற்றும் என்றும் விளாடிமிர் புதின் கூறியி ருக்கிறார்.

 

No comments:

Post a Comment