தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு நபார்டு வங்கி ரூ.40 ஆயிரம் கோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 14, 2021

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு நபார்டு வங்கி ரூ.40 ஆயிரம் கோடி

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தகவல்

சென்னை, ஜூலை 14- தமிழ் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு நபார்டு வங்கி நடப்பு நிதியாண் டில் ரூ.40 ஆயிரம் கோடி வழங்க உள்ளதாக, வங் கியின் தொடக்க தின விழா வில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு தெரிவித்தார்.

தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங் கியின் (நபார்டு வங்கி) 40ஆவது தொடக்க தின விழா நேற்று (13.7.2021) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு சிறப்பு விருந்தின ராக பங்கேற்றார். அவர் பேசியபோது, ‘‘கடந்த நிதியாண்டில் தமிழ்நாட் டின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு நபார்டு வங்கிரூ. 27,135 கோடி கட னுதவி வழங்கியது. நடப்பு நிதியாண்டில் ரூ.40 ஆயி ரம் கோடி வழங்க உள்ளது’’ என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (டிக்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ஹன்ஸ்ராஜ் வர்மா தனது உரையில், ‘‘இன்று ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை உள் ளது. புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்க, அனைத்து தரப்பினரும் ஒருங்கி ணைந்து பணியாற்றுவது அவசியம்’’ என்றார்.

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலு வலக தலைமைப் பொது மேலாளர் எஸ்.செல்வ ராஜ் பேசும்போது, ‘‘ஊரக உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துவதற் காக பல்வேறு திட்டங் களை நபார்டு வங்கி செயல்படுத்தி வருகிறது’’ என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பாக பங்களித்த வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் இம்ரான் அமின் சித்திக் முன்னி லையில் இந்தியன் வங் கிக்கும், நபார்டு வங்கிக் கும் இடையே பல்வேறு கடனுதவித் திட்டங்களுக் கான புரிந்துணர்வு ஒப் பந்தங்களும் கையெழுத் தாகின. நபார்டு வங்கி தயா ரித்த கடல்பாசி வளர்ப்பு குறித்த கையே டும் வெளியிடப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலக தலைமை பொது மேலாளர் சுமன் ரே, கனரா வங்கி தலைமை பொது மேலாளர் பி.பழனிசாமி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர் புவன் சந்திர சர்மா உட்பட பல் வேறு வங்கிகளின் அதி காரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment