தமிழர் தலைவர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 30, 2021

தமிழர் தலைவர் அறிவிப்பு

பயிற்சி பெற்ற திராவிட நாற்றுகளுக்கு இயக்க ஏடுகளின் ஆண்டு சந்தாக்கள் 50 விழுக்காடு தள்ளுபடியில் வழங்கப்படும். அதுவும் பெற முடியாத மாணவர்களுக்கு புரவலர்கள் உதவியோடு இலவசமாகவும் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்.

பரிசு அறிவிப்பு: நெல்லை மண்டலத்தில் தேர்வு எழுதிய 37 மாணவர்களுக்கும் இயக்க வெளியீடுகள் மொத்தம் 16 நூல்கள் அடங்கிய தொகுப்பினை வழங்குவதாக தென்மாவட்ட பிரச்சாரக்குழு செயலாளர் சீ.டேவிட் செல்லத்துரை அறிவித்தார். நெல்லை மண்டலத்தில் தேர்வு எழுதிய முதல் பத்து பேருக்கு சுயமரியாதை சுடரொளி மேனாள் மாவட்ட தலைவர் சிவனணைந்த பெருமாள் நினைவாக பழ.அதியமான் எழுதிய " வைக்கம் போராட்ட வரலாறு" எனும் நூல் வழங்குவதாக தென்காசியை சேர்ந்த டாக்டர் திருநாவுக்கரசு அறிவித்தார். மதுரை மண்டலத்தில் மூன்றாமிடம் பெறும் மாணவருக்கு பரிசுத்தொகை ரூ 2000/த்தை வழங்குவதாக செல்வ.மீனாட்சிசுந்தரம் அறிவித்துள்ளார்.  மூன்றாம் பரிசுத்தொகை ரூ 2000/-த்தினை தனது மூத்த மகன் சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசு நினைவாக வழங்குவதாக மண்டல தலைவர் சாமி திராவிடமணியும், அடுத்த அய்ந்து இடங்களை பெறும் மாணவர்களுக்கு தி.பெரியார் சாக்ரடீசு பிறந்தநாள் நினைவாக அவரது இணையர் ஜெ.இங்கர்சால் மற்றும் அவரது மகள் .பெ.தமிழீழம் ஆகியோர்" பெரியார் பிஞ்சு" ஆண்டுச் சந்தா வழங்குவதாகவும், தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் தி‌.பெரியார் சாக்ரடீசு ஆக்கத்தில் உருவான "புத்தர்" படக்கதை புத்தகம் வழங்குவதாக இராமநாதபுரம் மாவட்ட மேனாள் தலைவர் பா.ஜெயராமன்- தமிழரசி இணையர்  அறிவித்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக படித்துவரும் சென்னை காயிதே மில்லத் கல்லூரி மாணவி துர்கா என்பவர் காணொலி வகுப்பில் இடையே வந்து ஆசிரியரிடம் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனே ஆசிரியர் அவர்களும் அவரது இணைப்பை வழங்கச் சொல்லி அவரது விவரம் கேட்டறிந்தார். எந்த தலைப்பில் ஆய்வு செய்கிறீர்கள் என்று ஆசிரியர் கேட்டதற்கு திராவிட இயக்கத்தின் சேவை சமூகத்தில் ஆற்றிய பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்வதாக மாணவி துர்கா பதிலளித்தார். அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து அவரது ஆராய்ச்சி படிப்புக்கு தேவையான உதவிகளையும் செய்வதாக கழகத் தலைவர் கூறினார்.

No comments:

Post a Comment