செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 9, 2021

செய்தியும், சிந்தனையும்....!

இராமலிங்க விலாஸ்

மிலிட்டரி ஓட்டலா?

*          'அந்தணர் குரல்' இதழ் ஜூலை முதல் வெளிவரும்.

- பிராமண சங்கத் தலைவர் அறிவிப்பு         

>>           "அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்' என்பது குறள். இந்த இலக்கணத்துக்குப் பார்ப்பனர் எப்படிப் பொருந்துவர்? யாகத்தின் பெயரால் மனிதர்களைக்கூடக் கொன்ற வர்கள் ஆயிற்றே!  

ஈஸ்வரர் எங்கே?

*           திருவெறும்பூர் அருகில் மலைமீது எறும்பீஸ்வரர் கோயில் உள்ளது.    

>>           எறும்பை யார் நசுக்கினாலும் அவர் நாத்திகரே!

கடவுளை மற; மனிதனை நினை!

*           வடபழனி முருகன்கோயிலுக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான நிலம் - அரசு மீட்பு.  

>>           நிலத்தை அபகரித்தபோது வடபழனி முருகன் என்ன செய்து கொண்டு இருந் தாராம்?

மீண்டும் சாமியார் மடம்தான்!

*           .பி. முதல் அமைச்சருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துக் கூறவில்லை.    

>>           2022 சட்டமன்றத் தேர்தலில் .பி.முதல் அமைச்சர் ஆதித்யநாத்துக்குக் கல்தா என்று பொருள்!

No comments:

Post a Comment